Wednesday, 29 October 2014

முத்துக்கள் மூன்று ! (2)

விழியிருந்தும்   வையத்தில் வீணாக வாழ
வழியிருந்தும்  தேடாதார் தேவயை- பேச
மொழியிருக்க மௌனமே மாலையாக வாழ்வில்
பொலிவிழந்து போகும் அறி.அஞ்சல்  குணமோ அழகுப் பதுமையோ
தஞ்சமெனக் கொஞ்ச தயக்கமோ- பேதையை
கள்ளென போந்தும்  கயவர் தமக்கோ
உளிகல்லோ பெண்மை உலகு.

கண்ணென பேசியே காரியத்தை சாதித்து
மண்ணென தூற்ற செழிக்குமோ வையத்தில்
பெண்ணென்ற ஓரினமே பேரிடறை தாங்கிடவோ
மண்ணாகும் மாந்தர்  உலகு.

26 comments:

 1. புதிதாய் ஒரு திருவள்ளுவர் :) அப்படித்தான் தோன்றுகிறது எனக்கு

  ReplyDelete
 2. பெண்ணென்ற பெட்டகமும் விழிதிறந்து
  வழி காணும் நாளோ வந்துவிட்டது எந்நாளோ
  தொடர் பேச்சுக்கு நோபல் பரிசென்றால் அதுவும்
  போய் சேருமே வலிமைமிகு வாய்(மை) மிகு பெண்களுக்கே.

  அஞ்சல் என்ற சொல்லை கேட்டறியா மாதர்களும்
  உலாவரும் பாராய் இந்த பாரில் பஞ்சமில்லாமல்
  கள்ளாய் நினைக்கும் கயவர்களின் சிரத்திற்கோ கல்லாய்
  பதம் பார்க்கும் நாளும் வந்துவிடும் விடு கவலை பேதையே

  போலிப் பேச்சுக்கு மயங்கா மங்கையராய் இம்மண்ணில்
  தூற்றாமல் போற்ற செழிக்குமே இவ்வையகமும் இனி
  பெண்ணென்ற பேரினம் மட்டுமே தாங்கிடும் இவ்வுலகை
  பொன்னாக மாற்றும் பெருஞ்செயல் சாதனையால்.

  தென்றலின் முத்துக்களுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. அருமையான வெண்பாக்கள்! சிறப்பான கருத்துக்கள்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 4. முத்துகள்தான்.

  ReplyDelete
 5. வெண்பாக்கள்
  அருமை
  இனிமை
  தம 3

  ReplyDelete
 6. வெண்பா முத்துகள் நன்று....
  வேதா. இலங்காதிலகம்.
  http://kovaikkavi.wordpress.com/2014/10/28/7-84/

  ReplyDelete
 7. Pretty ordinary... Don't believe the praise of your jalras.

  ReplyDelete
 8. முத்துக்கள் மூன்றும் அருமை சகோதரி.

  ReplyDelete
 9. கவிதை புரிஞ்ச மாதிரியாகவும் இருக்கு புரியாத மாதிரியாகவும் இருக்கிறது

  ReplyDelete
 10. வெண்பா எழுதும் என் இனிய தங்கைக்கு முதலில் என் அன்பான வாழ்த்து. எழுதும் பெண்களோ குறைவ, அதிலும்
  கவிதை எழுதும் பெண்களோ மிகவும் குறைவு!, அதிலும்
  மரபுக்கவிதை எழுதும் பெண்களோ மிகமிகவும் குறைவு! அதிலும்,
  வெண்பா எழுதும் பெண்களோ மிகமிகமிகவும் குறைவு!
  இந்தக் கடைசிப்பிரிவில் நீ இடம் பிடித்திருப்பது மகிழ்ச்சிக்கும் பாராட்டுதலுக்கும் உரியது. ஆனால் கொஞ்சம் எச்சரிக்கை தேவை.
  (ஒன்றுமில்லை, பதிவை எழுதி, ஏற்றும் முன் மீண்டும் ஒருமுறை நீயே கவனமாகப் பார்த்திருந்தால் இந்தச் சிறுசிறு பிழைகளைக் கவனித்துத் திருத்தியிருப்பாய்.. நீதான் அவசரக் குடுக்கையாயிற்றே?) கவனி-
  (1) முதல் வெண்பாவின் இரண்டாவது “தேவயை- பேச“ என்றிருப்பது, ்தேவையைப் பேச“ என்றிருக்க வேண்டும். தனிச்சொல் இதுவல்ல.
  (2) இரண்டாவது வெண்பாவின் ஈற்றிரண்டடிகள்,
  கள்ளென போந்தும் கயவர் தமக்கோ
  உளிகல்லோ பெண்மை உலகு“ என, அடியெதுகை அமையப் பெறாமல் அலங்கோலமானது ஏன்? இதனை,
  “கள்ளென மாந்தும் கயவர் தமக்(கு)உளி
  கல்லோ பெண்மை? கருது!“ என்று இருந்திரு்க்கலாம்.
  மூன்றாவது வெண்பாவிலும், எழுத்துப் பிழையுடன் எதுகை மோனை அமையாத அவசரமும் தெரிகிறது. கவனித்துத் திருத்துக.
  (கவனம் - எதுவுமே எழுதாதவரை விடவும் சிறுசிறு பிழையிருப்பினும் முயற்சி செய்வோரே வெற்றிபெறுவர். நீ வெற்றி பெறுவாய்.

  ReplyDelete
  Replies
  1. “கல்லெனவோ பெண்மை? கருது“ என்றிருக்க வேண்டும்.
   (தப்புத்தான்...தப்புத்தான்... நீ தப்புப் பண்ணலாம், நாங்க பண்ணக் கூடாதோ என உன் மைண்ட் வாய்ஸ் கேக்குது!..சரி சரி வுடு... கவிதை-அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா..)

   Delete
 11. இப்படி உரிமையுடன் தவறுகளை சுட்டிக்காட்டி திருத்த உறவுகள் இருக்க கவலை எதற்கு நன்றிங்க அண்ணா. இனி கவனமுடன் எழுதுகிறேன்.

  ReplyDelete
 12. வணக்கம்

  தங்களின் வலைதளம் இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

  http://blogintamil.blogspot.fr/2015/08/blog-post.html

  நன்றி
  சாமானியன்

  ReplyDelete
 13. கண்ணென பேசியே காரியத்தை சாதித்து
  மண்ணென தூற்ற செழிக்குமோ வையத்தில்... // மிகவும் அருமையான கவிதை!

  ReplyDelete
 14. கவிதை மிக அருமை.

  ReplyDelete
 15. ம்ம்ம் தமிழ் விளையாடுது சகோதரி!

  ReplyDelete
 16. வணக்கம் அக்கா (அப்படிசொல்ல அனுமதி தருவீர்களா?) தங்கள் தளத்திற்கு புதியவன் கவிதை அழகு அருமை! ஆனால் சிறிது புரியமாட்டோங்கிது! நான் இன்னும் அதிகமா படிக்கவேண்டும்!! வாழ்த்துகள்!!

  அன்புடன் கரூர்பூபகீதன் நன்றி!!!

  ReplyDelete
 17. வெண்பாவில் பெண்பாக்கள் ரசித்தேன் :)

  ReplyDelete
 18. பாவலர் கவிதைகள் அருமை!

  ReplyDelete
 19. வெண்பாக்கள் நல்ல முயற்சி ... கவிதாயினி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 20. வணக்கம்...நான் மிகச் சிறியவள் ஆதலால் வந்தேன் என்ற அட்டெண்ட்ஸ்க்கு இது. என் வலை தளம் பார்க்க வாங்க...http://chinnavalsurya.blogspot.in/2015/11/blog-post.html நன்றி

  ReplyDelete