Monday 27 October 2014

தமிழ்ச்சாரல் !


கண்ணழகு ராதையை கட்டியணைக்க தோனுதடி
பெண்ணழகு பேதையினால் பேராசை கூடுதடி
உன்னழகு ஓவியமே உருகுலையச் செய்குதடி
என்னழகு எதுவென்பேன் எழிலாளை கண்டபின்னே .


மொண்டுவிடத் தோனுதடி முத்தழகுத் தமிழை
கண்டுவிட்ட பின்னே கற்கண்டாய் ஆனதடி
தொன்றுதொட்டு வரும் மரபை நாளும்
வென்றுவிட களியாட்டம் போடும் மனமே.

காலைச் சோலையிலே கன்கவர் வித்தாக
மாலைக் காட்சியிலோ மயக்கிடும் மானாக
சேலைப் பூவிலும் சேர்ந்திடுமே உன்வாசம்
ஆலைக் கரும்பாக ஆனதடி என்னுள்ளம்.

21 comments:

  1. நெஞ்சினிக்கும் சந்தக் கவிதைகள். அருமை!
    த ம 1

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வானது தங்கள் வருகையும் கருத்தும் நன்றிங்க.

      Delete
  2. மழைச்சாரல் பெய்யும் வேளையில் தமிழ் சாரலில் நனைந்து இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்தேன்! அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  3. சாரலில் நனைந்துக் குளிர்ந்தேன்
    பதிவர் சந்திப்பிற்கு வராதது தனித்துத் தெரிந்தது
    அடுத்த சந்திப்பில் சந்திப்போம்
    வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete
    Replies
    1. தீபாவளிக்கு ஊருக்கு சென்றதால் மதுரை வர இயலவில்லை. கண்டிப்பாக அடுத்த சந்திப்பில் சந்திக்கலாம் . மிக்க மகிழ்ச்சி நன்றிங்க ஐயா.

      Delete
  4. என்ன அழகிய பாடல் !!

    அப்பப்பா...

    ஆனந்தம் பொங்கும் இப்பாடலை நான்
    ஆனந்த பைரவி ராகத்தில் பாடினேன்.

    விரைவில் லிங்க் அனுப்புகிறேன்.
    கும்மி மெட்டு இட்டு பாடுங்கள்.
    அவையே அதிரும்.

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
    Replies
    1. காத்திருக்கிறேன் ஐயா. லிங்க் அனுப்புங்க.
      பதிவர் சந்திப்புக்கு சென்றீர்களா ?

      Delete
  5. படிக்கும் போது தேனாக இனிக்கிறது அருமை

    ReplyDelete
    Replies
    1. தேனினும் இனிய தங்கள் அனைவரின் வாழ்த்து. நன்றிங்க.

      Delete
  6. ஆஹா வந்துட்டாங்கையா....நீண்ட இடைவெளிக்குப்பின்

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் வந்து விட்டேன். தென்றலில் தங்கள் வருகை கண்டும் மகிழ்ந்தேன் நன்றி.

      Delete
  7. கிராமியப் பாணியில் துவங்கி செந்தமிழ்ப்பாவாய் மாறிய அழகு ராகம் அசத்துகிறது. பாராட்டுகள் சசி.

    ReplyDelete
    Replies
    1. என்னுள்ளே கலந்து விட்டது கிராமியம் மாற்ற முடியவில்லையே ...
      மகிழ்ச்சி தோழி.

      Delete
  8. ஆஹா அருமை அருமை! படமும் அதற்கேற்ற கவிதையும் .

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி தோழி. வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன்.

      Delete

  9. வணக்கம்!

    ஆலைக் கரும்பாக ஆன அடிகளுக்குள்
    சோலை மணக்கும் சுடர்ந்து!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா எல்லாம் தங்கள் ஆசி.

      Delete
  10. அருமை. பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி. நன்றியும். பதிவர் சந்திப்புக்கு இந்த முறை போனிங்களா ?

      Delete
  11. இனிமை வரிகள் தோழி! பாராட்டுக்கள்!

    ReplyDelete