Sunday 14 September 2014

நீ யாரோ ?

தேடலின் ஆரம்பமும் நீ
தேக்கத்தின் தொடக்கமும் நீ
உள்ளிருந்து உணர்த்துகிறாய்
உயிரோட்டத்தை நிகழ்த்துகிறாய்..
ஆரம்பமும் முடிவுமில்லா
வானலாவிய இருப்பும் நீ.
ஓட ஓட விரட்டுகின்றாய்
ஓரிடத்தில் நிறுத்துகின்றாய்.
நீயில்லா இடத்தினிலே
நின்று போகும் எல்லாமங்கே..
நிம்மதி என்ற பெருமூச்சை
வழங்குகின்ற வள்ளல் நீ..
அறிவுசார் ஜீவனல்லாது
 அனைத்திலுமே நிறைந்திருக்கும்
நீ யாரோ ?

36 comments:

  1. வணக்கம்
    சகோதரி

    ஒவ்வொரு வரிகளையும் இரசித்துப்படித்தேன்.... பகிர்வுக்கு நன்றி த.ம 2வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோ. பதில் எங்கே ?

      Delete
  2. உயிரோட்டத்தை நிகழ்த்துகிற வரிகள்..!

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க என்னவென்று சொல்லவில்லையே..

      Delete
  3. வணக்கம் அன்புத்தோழி!

    மாய உலகின் மயங்கிடும் வாழ்வினில்
    காயம் அடக்குபவன் காண்!

    சிறந்த சிந்தனை! வாழ்த்துக்கள்!
    நலமா தோழி? நீண்ட காலமாகக் காணவில்லையே!...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் தோழி. எப்படி இருக்கிங்க ? நான் நலமாகவே இருக்ககிறேன்.

      Delete
  4. அருமையா சொன்னீங்க! எனக்குக் கிடைத்த விருது ஒன்றினை தங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளேன்! இங்கே பார்க்கவும் http://thalirssb.blogspot.com/2014/09/blogger-award-14-9-14.html

    ReplyDelete
    Replies
    1. விருது பெற்றமைக்கும் பகிர்ந்தளித்தமைக்கும் நன்றிங்க.

      Delete
  5. என்னங்க பதிவை ஆடிக்கு ஒன்று அமாவாசைக்கு ஒன்று என்று போட்டு விட்டு பார்க்க வருபவர்களை யார் நீ என்று கேட்டு அதிர வைக்கிறீங்களே.

    ReplyDelete
    Replies
    1. ஹஹ அது புதிருக்கு.

      Delete
  6. நான் ஸ்கூல் பக்கம் போனதில்லை இருந்தாலும் உங்கள் கேள்விக்கு என்னால் முடிந்த வரை பதில் சொல்லுகிறேன்

    ReplyDelete
  7. அந்த யார் நீ என்ற கேள்விக்கு பதில் "தமிழ்" சரியா?

    ReplyDelete
    Replies
    1. தமிழாகவும் இருக்கலாம்...

      Delete

  8. தென்றல் வீச ஆரம்பித்து இருக்கிறது நிற்காமல் தொடர்ந்து வீசட்டும்

    ReplyDelete
    Replies
    1. முயற்சி செய்கிறேன்.

      Delete
  9. Replies
    1. ஒரு கவிதை எத்தனை பதிலைத்தருகிறது. ஆமாம் மனமாகவும் இருக்கலாம். மகிழ்ச்சி தோழி.

      Delete
  10. மிகவும் நன்று. தகவலுக்கு நன்றிங்க.

    ReplyDelete
  11. ஆஹா.. :)
    'காற்று' ? மூச்சு? உயிர்? நீங்களே சொல்லிடுங்க !

    ReplyDelete
    Replies
    1. தேன் தமிழே வந்து நீங்களே சொல்லுங்க என்றால் சொல்லாம இருக்க முடியுமா ? நான் "பசியை" நினைத்து எழுதினேன் தோழி.
      பொதுவா எல்லோரும் சொல்வது தானே பசி என்ற ஒன்று மட்டும் இல்லையானால் இந்த உலகத்தில் என்ன இருக்கும் என்று ?

      Delete
  12. இனிய வணக்கம் தங்கை சசி..
    நலமா??
    அருமையான தேடல் கவிதை..
    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. அண்ணா வாங்க வாங்க எப்படி இருக்கிங்க ?
      அண்ணி குழந்தைகள் எல்லாம்நலமா ?

      Delete
  13. நல்ல கவிதை. வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

      Delete
  14. நல்ல கவிதை.

    நல்ல தேடல். . தேடல் எல்லாம் வயிற்று பசிக்குதானே!

    ReplyDelete
    Replies
    1. சரியாக சொன்னீர்கள் தோழி. நன்றி.

      Delete
  15. ரொம்ப நாளைக்கு அப்புறம் “தென்றல் காற்று“ வீசியிருக்கு போல..
    பதில-
    காற்றுமனும் சொல்லலாம்,
    கவித்தென்றல் னும் சொல்லலாம்
    அன்புத் தங்கை சசின்னும் சொல்லலாம்.
    வாழ்த்துகள் மா

    ReplyDelete
    Replies
    1. வாங்க அண்ணா நலம் தானே ?

      Delete
  16. அடடே! மதுரை வலைப்பதிவர் திருவிழாவில் உன் கவிதைத் தொகுப்பு வருதா? ரொம்ப ரொம்ப மகிழ்ச்சிமா. வாழ்த்துகள்..
    உன்கவிதைத் தென்றல் உலகமெலாம் பரவ உளமார்ந்த வாழ்த்துகள் பா!

    ReplyDelete
    Replies
    1. அண்ணா மதுரைக்கு வருவதாக மட்டுமே இருக்கேன். தொகுப்பு இப்போதைக்கு இல்லைங்க அண்ணா. உங்களுக்கு தெரியாம வெளிவருமா ?

      Delete
  17. அறிவுசார் ஜீவன் அறியும் உணர்வில்
    நெறிமுறை கண்டும் நிகழும் - வறிதும்
    அறுசுவை பற்றிலார் ஆயினும் வாட்டும்
    உறுபசி என்றே உரை !

    நீண்ட இடைவெளியின் பின் வந்து இப்படியா செக் வைக்கிறது
    ம்ம் நல்ல கேள்வி அருமை சசி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    ReplyDelete
  18. கனவுகள் காயப்பட்டதாய்,
    நினைவுகள் ஊனப்பட்டு,
    நிஜமது பட்டுப்போனதால்,
    நிழல் வாழ்வாகி,வலியாக.
    உயிரதன் ஏக்கத்தில்-உடல்
    உருமாறி இதயம் சிதைய,
    சொர்கத்திற்கா,நரகத்திற்கா
    பயணம் போகிறோம்-அது
    எது-ஏது அறியாமலே வாழ்வு!

    ReplyDelete
  19. அவன் இறைவனாக இருக்கலாம்!

    ReplyDelete