Thursday 19 June 2014

எங்கோடி நான் தேட.....

தொட்டிலிட்ட கனவுந்தான்
தூங்கத்தான் மறுக்குதடி...

எச்சமிட்ட கன்னத்தை
எட்டி எட்டி பார்க்குதடி...

முந்தாணைய பிடிச்சிகிட்டு
முன்னும் பின்னும் ஓடுதடி...

எப்பத்தான் மடிதருவ
ஏக்கமுடன் கேக்குதடி...

கைக்குள்ள ரேகையாட்டம்
பத்திடுச்சே மருதாணியாட்டம்..

ஆடுபுலி ஆட்டத்துக்கோ
ஆள் சேர்க்கும் தோழியாட்டம்...

நிறைகுடமா நித்திரையில்
நிதமிருக்கும் அடுக்களையில்...

பச்சரிசி பல்லாட்டம்
பருவ மக நெனப்பிருக்க..

எங்கோடி நான் தேட
என்னுள்ளே கலந்தவள..

30 comments:

  1. த.ம.2
    "உங்கூட தான் நானிருக்கேன்
    உன் எழுத்தால கவியாகிறேன்" :)
    அருமை தோழி! தமிழ் உங்க விரலிலே விளையாடுதே..

    ReplyDelete
    Replies
    1. வருக வருக தேனென இனித்த வாழ்த்து... நன்றி தோழி.

      Delete
  2. நீண்ட இடைவேளைக்குப் பின் வருகை!
    வழக்கம்போல் அருமை

    ReplyDelete
    Replies
    1. ஐயா வணக்கம் வருக நலம் நலமறிய ஆவல். தங்கள் வருகை கண்ட மகிழ்ந்தேன். நன்றிங்க ஐயா.

      Delete
  3. தமிழ் தேடிய அழகு கவிதை அருமை..!

    ReplyDelete
    Replies
    1. வருக தோழி. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க தோழி.

      Delete
  4. அழகான கவிதை!
    தொடருங்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  5. வணக்கம்
    சகோதரி.

    மிக அருமையான கவிதை புனைந்து சென்ற விதம் சிறப்பு வாழ்த்துக்கள்


    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க. சகோ.

      Delete

  6. நீங்கள் எழுதும் போது தேனை குழைத்துதான் எழுதுவீங்களோ என்னவோ அதை படிக்க படிக்க இனிக்கிறதே!!! பலைப்பதிவை ஞாபகம் வைச்சு மீண்டும் வந்தற்கு வாழ்த்துக்கள்.. எழுதுங்கள் அடிக்கடி....எழுத மறக்க வேண்டாம்

    ReplyDelete
    Replies
    1. இப்படி இனிக்க இனிக்க வாழ்த்து வரும் போது எழுத கசக்குமா என்ன ?

      Delete
  7. அப்பா ஒருவழியாய்
    மீண்டும் தென்றல் வீசத்துவங்கிவிட்டதே
    விடாது இனியேனும் தொடர்ந்து வீச
    வேண்டுகிறேன்,வாழ்த்துக்களுடன்....

    ReplyDelete
    Replies
    1. ஐயா கட்டளையிடுங்கள் காத்திருக்கிறேன்..

      Delete
  8. அருமை! அருமை! நீண்ட நாளுக்குப்பின் மீண்டும் ஒரு நாட்டுப்புறப்பாடல் ரசிக்க வைத்தமைக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  9. உயிரில் கலந்தவளை வெளியில் போய் தேடாவிட்டால்தான் என்ன?ஏக்கம் தொனிக்கிற உள் புதைவுகவிதை,நன்றாக இருக்கிறது ஒரு நாட்டுப்புற பாடலின் சாயலோடு,வாழ்த்துக்கள்/

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  10. எங்கோடி நான் தேட
    இனிய கவிதைதான் படிக்க
    என்றெண்ணி அலைய விடாமல்
    இங்கேதான் அருமையாக
    இருக்குது பார் என்றுசொல்லி
    இனிய கவிதை படைச்சீரே!...
    இதயங்களை வென்றீரே!..

    அருமையான கவிதை சசிகலா!

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. இனிக்கும் தங்கள் வாழ்த்துக்கு இதயம் கனிந்த நன்றிங்க தோழி.

      Delete
  11. அழகான கவிதை!
    தொடருங்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  12. எங்களோடு தொடர்ந்து பயணித்துக்கொண்டே இருங்கள் தமிழ் தங்களோடும் தொடர்ந்து பயணிக்கும் வலைத்தள சொந்தங்களின் வேண்டுதல்கள் இவைகள் .வாழ்த்துக்கள் என் அன்புத் தோழியே நான் நலமாக இருக்கின்றேன் தங்களின் நலன் அறியவும் ஆவலுடன் இருக்கின்றேன் .

    ReplyDelete
    Replies
    1. அப்படியே தோழி தங்களோடே பயணிக்கிறேன்.. நானும் நலமாகவே இருக்கிறேன் தோழி.

      Delete
  13. இனிமையான வரிகள். பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் தோழி நலம் நலமறிய ஆவல்.

      Delete
  14. கோடையில் தென்றலாய் உங்கள் கவிதை அருமை! தொடர்க!

    ReplyDelete
  15. நீண்ட இடைவெளிக்குப் பின் உங்கள் தளத்தில் ஒரு கவிதை. பாராட்டுகள்.....

    கவிதையை ரசித்தேன்.

    ReplyDelete