Thursday, 10 April 2014

முந்தி ஓடும் சனத்தப்பாரு !


ஆளுக்கொரு கட்சிக்கொடி
ஆரவார பேச்சு கேட்டுக்கோடி
முந்தி ஓடும் சனத்தப்பாரு
முழக்கமிடும் கோசத்தக்கேளு
முன்ன பின்ன சாடிகிட்டு
முகத்த நல்லா கோணிக்கிட்டு
கூட கும்பிடு போட்டுகிட்டு
கூட போகும் (ஆட்டு)மந்தையப்பாரு...
வெட்டத் துளிர்க்கும் முருங்கையாட்டம்
வேட்டிக் கரைக்கொரு கட்சியாட்டம்
கூலி கொடுத்து தலைக்குந்தான்
கூட்டம் சேர்க்கும் நாளுந்தான்
புத்தம் புதுசா வண்ணம்தான்
புதுசா உடுத்தும் குட்டிச் சுவருந்தான்.
உன்னை என்னை யார் கேட்பா ?
உண்மை ஓட்டு யார் போட்டா ?
வெள்ளிக்காசு சிரிக்குமிடம்
வெளுத்து வாங்கும் கள்ள ஓட்டுகளும்..
தோத்தவரும் ஜெயித்தவரும்
தோரணமிடும் வசவுகளும்..
என்னாளும் இது வாடிக்கைதான்
நமக்கென்ன அங்க வேடிக்கைதான்..
வேளை முடிஞ்சி போச்சிதின்னா
வேலி போட்டு போயிடுவார்...
நமக்கு என்றும்
கூலி வேல தான் மிச்சமடி...
கூடக்கும்பிடு வேண்டாமடி.

25 comments:

 1. வெள்ளிக்காசு சிரிக்குமிடம்
  நமக்கு என்ன வேலை அங்கே..!

  ReplyDelete
  Replies
  1. ஆமாங்க....வருகைக்கும் கருத்திற்கும் நன்றிங்க.

   Delete
 2. வெள்ளிக்காசு சிரிக்குமிடம்
  வெளுத்து வாங்கும் கள்ள ஓட்டுகளும்..
  Vetha.Elangathilakam.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றிங்க.

   Delete
 3. மிக அருமை சசிகலா. //கூடக்கும்பிடு வேண்டாமடி.// இதோடு "சிந்தித்துச் செயல் படடி , பாத்து ஒன் ஓட்டப் போடுடி" இந்த மாதிரி உங்க வார்த்தையில் சேர்த்தா நல்லாயிருக்குமே :)
  த.ம.2

  ReplyDelete
  Replies
  1. சிந்திக்கவும் நாம் தான் சொல்லித்தரனுமா ? என்றே அதோடே விட்டுவிட்டேன். நன்றிங்க.

   Delete
 4. உண்மைதான்! நமக்கு கை உழைச்சாத்தான் சோறு! அவர்கள் ஒரு மாதம் கூத்தாடிவிட்டு ஜம்மென்று நாற்காலியில் அமர்ந்து விடுவார்கள்! சிறப்பான கவிதை!

  ReplyDelete
  Replies
  1. மிகச்சரியாக சொன்னீர்கள். வருகைக்கு நன்றிங்க.

   Delete
 5. Replies
  1. ஏன் என்ன ஆச்சி ?

   Delete

 6. வணக்கம்!

  குரங்காட்டம்! கூத்தாட்டம்! கொள்ளையிடும் ஆட்டம்!
  மரமாட்டம் போன்றுமனம் ஆட்டம்! - இரவாக
  நாட்டை இருட்டாக்கும் ஆட்டம் பல! எல்லாம்
  கோட்டை கொடுக்கும் கொழுப்பு!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
  Replies
  1. நன்றாக அழகாக சொன்னீர்கள் ஐயா.

   Delete
 7. வழக்கம் போல நல்லா இருக்குங்க..

  ReplyDelete
 8. உணரவேண்டும் மக்கள்! தேர்தல் கூத்தினை கவிதையாய் வடித்தமை சிறப்பு சசிகலா.

  ReplyDelete
  Replies
  1. ஆமாங்க உணர வேண்டும் மக்கள்.... நன்றிங்க.

   Delete
 9. அருமை சசிகலா.

  பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 10. வணக்கம் நண்பர்களே

  உங்கள் தகவல் பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி மேலும் உங்கள் வலைதளத்தின் themesசை மாற்றம் செய்ய உடனே என்னுடிய இணையதளத்தை பயன்படுத்தும் மாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் நன்றி இலவசமாகப பிளாக்கர் தீம்ஸ் டவுன்லோட் செய்ய இந்த லிங்கை அழுத்தவும்

  ReplyDelete
 11. உண்மையை தெள்ள தெளிவாக சொல்லும் கவிதை.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 12. என்ன ஆச்சு பா? உடல்நிலை ஏதும் ச்ரியில்லையா அல்லது நல்ல செய்தி ஏதும் நடப்பதற்கான ஏற்பாடா என் போலும் உன் அண்ணன்களுக்குத் தகவல் சொல்லக்கூடாதா? இரண்டுமாத மௌனம்? விரைவில் பதிவிட வேண்டுகிறேன் - அன்பு அண்ணன், நா.முத்துநிலவன், புதுக்கோட்டை

  ReplyDelete
 13. அண்ணா மிக்க மகிழ்ச்சிங்க அண்ணா. என்னையும் காணவில்லையே என்று தேட பதிவுலகில் தங்களைப்போன்ற உறவுகள் இருப்பது குறித்து மிகவும் மகிழ்கிறேன். அண்ணா முன்பு வீட்டில் இருந்தேன் ஆதலால் பதிவிட முடிந்தது. இப்போது அலுவலகம் செல்வதால் நேரமின்மை தான் காரணம் வேறொன்றுமில்லை அண்ணா.. நேரம் கிடைக்கும் போது கண்டிப்பாக வருகிறேன். மிக்க மகிழ்ச்சியும் தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றியும்.தங்கள் நலனையும் அறிய ஆவல் அண்ணா.

  ReplyDelete