Thursday 26 June 2014

நினைவூஞ்சல் !


பந்தியில முந்தி வச்சா
பார்வை பட்டு போகுமுன்னே..
முந்தியில முடிஞ்சிவைச்சேன்
முத்தான கவிதை ஒன்னு...
முன்வரிசை ராகத்தில
முத்தழகன் பேரினிக்கும்

பின்ன வரும் பல்லவியில்
பிரசேதி சொல்ல வரும்...
கட்டழகு ஆசமச்சான்
கருத்தழகு மீசமச்சான்....
கன்னக்குழி தேசத்தில-என்
கண்ணிமைய பூட்டிவச்சான்..

அவனோ
காத்தோட சேதி சொல்ல
காதோரம் உரசி நிக்கும்...
பார்த்து பேசி பழகிடத்தான்
பருவ மக(ன்) நெனப்பினிக்கும்.

30 comments:

  1. மச்சானின் நினைவில் பிறந்த இந்தக் கவிதையும் இனிக்கிறதே சசி...! (ன்னு ஒரு கருத்து சொல்லிருந்தேனே... எங்க போச்சு?)

    ReplyDelete
    Replies
    1. அப்படியா ? காணாமல் போன கமெண்ட்...எங்கே எங்கே..

      Delete
  2. இம்பூட்டு ஆசையா எம்மேல
    என்னாச செல்ல கருங்குயிலே

    உன்னெனப்பா நானுமிருக்கேன்
    நாளொன்னு சொல்லு புள்ள

    ஓடிவந்து ஒன சேர
    மஞ்சத்தாலி நானும் கட்டி

    ஊர் மெச்ச வாழலாம் புள்ள
    ஒத்துமையோடு சாகும் வரை...

    ReplyDelete
    Replies
    1. எசப்பாட்டா....? நல்லாவே இருக்கு.

      Delete
  3. பின்ன வரும் பல்லவியில்
    பிரசேதி சொல்ல வரும்...
    கட்டழகு ஆசமச்சான்
    கருத்தழகு மீசமச்சான்....
    கன்னக்குழி தேசத்தில-என்
    கண்ணிமைய பூட்டிவச்சான்..

    இந்த வரிகள் நல்லா எழுதிருக்கீங்க

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  4. இனிமை தோழி..
    // கன்னக்குழி தேசத்தில-என்
    கண்ணிமைய பூட்டிவச்சான்..// ஆஹா
    த.ம.2

    ReplyDelete
  5. நினைவூஞ்சலின் ஆட்டம் அழகாக உள்ளது ஒவ்வொரு வரிகளிலும், வார்த்தைகளிலும், எழுத்துக்களிலும். பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க ஐயா.

      Delete
  6. நேசமச்சான் கவிதை அருமை.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  7. நினைவூஞ்சல் கவிதை மச்சானின் பதில் என்ன? /
    முன்வரிசை ராகத்தில
    முத்தழகன் பேரினிக்கும்

    பின்ன வரும் பல்லவியில்
    பிரசேதி சொல்ல வரும்./
    ஏதேனும் விடுகதையா.?..

    ReplyDelete
    Replies
    1. நினைவில் வந்ததை எழுதினேன் அவ்வளவே விடுகதை இல்லை.

      Delete
  8. அருமையான நாட்டுப்புற கவிதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  9. இன்மையான நாட்டுப்புறக் காதலை சொல்லும் அழகு கவிதை

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  10. //கன்னக்குழி தேசத்தில-என்
    கண்ணிமைய பூட்டிவச்சான்//

    நல்லாருக்கு....

    ReplyDelete
    Replies
    1. ஹஹ மகிழ்ச்சிங்க.

      Delete
  11. கவிதை நன்று.
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  12. நினைவு ஊஞ்சலாய்
    உனையே ஆட்டவே
    துணையைத் தேடுதோ
    இணையாய் ஏதினி!

    அழகான கிராமத்துப் பாடல்!
    உங்கள் கவிதைக் குழிக்குள்
    என்னையும் சிக்க வைத்துவிட்டீர்கள் தோழி!

    வாழ்த்துக்கள்!

    த ம.4

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  13. ரசித்தேன் சகோ..

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  14. கன்னக்குழி தேசத்தில் கன்னிமைகள் பூட்டி வைச்சான்.... சுகமான கற்பனை...

    அருமையான கவிதை. பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  15. http://kovaikkavi.wordpress.com/2014/07/01/21-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%af%8a%e0%ae%b3%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9/.........1000 uploaded.....

    ReplyDelete
  16. முந்தியுள்ளவ
    முடிஞ்சு வைச்சுட்டா
    மனச கொடுத்த
    மச்சான் மாட்டிகிட்டான்

    ReplyDelete