Friday 4 April 2014

இரண்டது ஒன்றானால் !



ஒற்றைக்காலில் உடல் சுமக்கும்
கொக்காகுமோ மனித இனம்.

சாலையோர மணல் தனிலே
காத்து நிற்கும் சுமை தாங்கி
ஓடியோடி சுமை சுமந்திடுமோ ?

சக்கரம் பூட்டி அச்சாணியேந்தி
சுழலுகின்ற வண்டிச் சக்கரம் காண்
இரண்டானால் அது சுமக்கும்.

உறவில் உறவும் இப்படியே
இரண்டு ஒன்றானாலது மணம்.

இரண்டது நாலானால் குடும்பம்.
நாலது எட்டானால் சமூகம்.
எட்டது விரிந்து பரந்தால் நாடு.

தனித்தனியாயோடி வெலல்
கூடாது இவ்வுலகில்..
நாம் கூடி இணைந்து வாழின் நல்வாழ்வு.

கூடி எவரும் தோற்றதில்லை
இதை மறந்தவர் வென்றதில்லை
வென்றவர் நட்பு மறப்பதில்லை.

11 comments:

  1. வணக்கம் சகோதரி
    ஒற்றுமையை வலியுறுத்தும் இந்த கவிதைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் சகோதரி. அனைவரும் ஒற்றுமையாக இருந்து விட்டால் பிரிவினை ஏது இவ்வுலகில்!!. அருமையான ஆக்கம். பகிர்வுக்கு நன்றிகள் சகோதரி..

    ReplyDelete
  2. வணக்கம்
    சகோதரி.

    கருத்து மிக்க வரிகள்.....நன்றாக உள்ளது.வாழ்த்துக்கள்...

    நன்றி
    அன்புடன்
    ரூபன்

    ReplyDelete
  3. ரொம்ப நல்லாச் சொல்லிட்டீங்க..அருமையான கவிதை.

    ReplyDelete
  4. " கூடி இணைந்து வாழின் நல்வாழ்வு." கருத்துள்ள கவிதை.

    ReplyDelete
  5. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பதை அருமையாக சொல்லி உள்ளீர்கள் சகோதரி... பாராட்டுக்கள்...

    ReplyDelete
  6. சகோதரர் திண்டுக்கல் தனபாலன் சொன்னதையே நானும் வழி மொழிகிறேன்
    தோழி .பாராட்டுக்கள் சிறப்பான நற் கவிதைக்கு .த .ம .4

    ReplyDelete

  7. வணக்கம்

    ஏற்ற படமும் எழுதிய பாடலும்
    போற்றும் புலமைப் பொழில்

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  8. கூடி எவரும் தோற்றதில்லை
    இதை மறந்தவர் வென்றதில்லை
    வென்றவர் நட்பு மறப்பதில்லை.

    பசுமையான பகிர்வுகள்..!

    ReplyDelete
  9. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்பதை கவிதையில் உணர்த்திவிட்டீர்கள்! அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  10. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை!

    ReplyDelete
  11. நண்பர் பாண்டியன் மூலமாகத் தங்களின் பதிவைப் பற்றி அறிந்தேன். தங்களது எழுத்துப்பணி தொடர வாழ்த்துக்கள்.
    www.drbjambulingam.blogspot.in
    www.ponnibuddha.blogspot.in

    ReplyDelete