Wednesday 2 April 2014

நிலா வரும் நேரத்தில்...

நிலவதனை பார்த்திருந்தே நில்யென்றே சொல்லிவர
களவதனை கற்றநிலா நில்லாமல் போகவர
நிழலுனக்கு ஏன்எதற்கு நீதிருடி தானெக்கு
கழன்றோடி போகுமுந்தன் களவாணி புத்தியெதற்கு ?
ஜன்னலோரு இருக்கையில ஜதிசேரும் நேரத்தில
சல்லடையாய் எனை அரித்து சாந்தமாகும் சாமத்தில
மேகத்தில் தினம் ஓடி தேகத்தை தான் மறைக்கும்-கவி
மோகத்தில் நானழைக்க கோபத்தில் தான் முறைக்கும்.

முகங்காட்டா மூடுபனி முடிவேது எனக்கு இனி
முகவரியாய் வானமினி பிறைநிலவே வந்திடு நீ.
மலைதேடி மறைகின்றாய் மனம் தேடும் நந்தவனம்
மாலை வருவாய் என்றே மருகி நிக்கும் மங்கை தினம்.

14 comments:

  1. //களவதனை கற்ற நிலா// அடடா..அருமை தோழி.

    ReplyDelete
  2. ம்.. அசத்தல் வரிகள்...
    அழகிய வர்ணனை..

    ReplyDelete
  3. நிலவு வர்ணணை அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. மங்கையை மாலையில் மலரவைக்கும் நிலவுப்பாட்டு அழகு..!

    ReplyDelete
  5. கவிதை நன்றாக இருக்கிறது சசிகலா.

    ReplyDelete
  6. முத்து நிலவன் அவர்களின் ஆதங்கப்பதிவின்
    காரணமாய் விளைந்த கவிதை என நினைக்கிறேன்
    மரபுக் கவிதையும் உங்களுக்கு சிறப்பாக வருகிறது
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. ரசித்தேன்... வாழ்த்துக்கள்

    ReplyDelete

  8. வணக்கம்!

    தமிழ்மணம் 6

    நிலாவரும் காலம் உலாவரும் தென்றல்
    பலா..தரும் பாடிய பாட்டு!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  9. மிக நன்றாகக் கவி வரிகள் அமைந்துள்ளது.
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  10. இரசித்தேன்! சுவைத்தேன்!

    ReplyDelete