Wednesday 12 March 2014

காதலின் லாவகம் !


அவரைக்காய் தோட்டத்திலே
அந்தி சாயும் நேரத்திலே..

ஓடோடி ஒளியும் மச்சான்
ஓரக்கண்ணால் பார்ப்பதேனோ ?
சொரக்காய தேடி வந்தேனு
சொக்கி பொடி போடும் மச்சான்.
அழகான முகம் உனக்கு
அடுக்கடுக்கா பொய்யெதுக்கு ?
அத்த மக உறவிருக்க
அன்ப நீயும் மறைப்பதெதுக்கு?
தை மாசம் தொலவிருக்கு
தண்ணி குடம் பக்கமிருக்கு..
சாடமாட பேச்சு வேணும்
சங்கதிக்கு தூதும் வேணும்.
அன்ப மட்டும் வச்சிக்கிட்டு
அண்ணார்ந்து பார்த்து லாபமில்ல.

ஆத்து பக்கம் நானும் வாரேன்
அங்கோடிப் போவோம் மாமா.
காதலின் லாவகத்தை
கண்ணியமா சொல்லித்தாரேன்.

 பேச்சு வழக்கு : தொலவிருக்கு-தொலைவில்

14 comments:

  1. கன்னியம்மா கொஞ்சம் கண்ணியமா சொல்லித் தந்தா தேவல.. நல்லா இருக்குங்க..

    ReplyDelete
  2. கவிதை அருமை! ஒரு சில எழுத்துப்பிழைகள் தவிர்த்தால் சிறப்பாகும்.அடுக்கடுக்கா பொய்யெக்கு - பொய்யெதுக்கு வேனும்- வேணும்

    ReplyDelete
  3. நல்லாருக்கு வரிகள் மேருகேறினால் இன்னும் சிறப்பா இருக்கும்

    ReplyDelete
  4. ஆத்தோரமாய் போய் கண்ணியமா காதல் செய்யப் போறீங்களா!? ரைட்டு

    ReplyDelete
    Replies
    1. அதானே..ஆத்துப்பக்கம் ஓடிப்போயி கண்ணியமா காதலா?
      // அன்ப மட்டும் வச்சிக்கிட்டு
      அண்ணார்ந்து பார்த்து லாபமில்ல.// உண்மைதான்..
      கவிதை நல்லா இருக்கு சசிகலா.

      Delete
  5. அவர்கள் தானே லாவகமா சொல்லித் தர முடியும்...?

    கவிதை அருமை சகோதரி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. கோடை நேரத்தில் வந்த மழைபோல வந்த உங்கள் கவிதை வறண்டு கிடந்த நிலத்தை நனைத்தது போல எங்கள் மனதை கவிதை மழையில் நனைத்து சென்றுவிட்டீங்க...

    ReplyDelete

  7. ஆத்தோரமா வர பயமா இருக்கு? காரணம் ஆத்துகுள்ள தள்ளிவிட்டுடிங்கனா என்ன பண்ணுறது

    ReplyDelete
  8. /// அன்ப மட்டும் வச்சிக்கிட்டு
    அண்ணார்ந்து பார்த்து லாபமில்ல.//

    அன்பு எப்போதும் எட்டாத பழம் போலதான் இருக்கிறது அதனாலதான் அண்ணார்ந்து பார்த்துகிட்டு இருக்கிறோம். ஆனால் அந்த பழம் ஒரு நாள் கிழே விழத்தானே போகிறது. அதனால் பொறுமையாகத்தான் இருக்க வேண்டும்

    ReplyDelete
  9. அவரைக்காய் தோட்டத்திலே
    அந்தி சாயும் நேரத்திலே
    அன்ப மட்டும் வச்சிக்கிட்டு
    அண்ணார்ந்து பார்த்து லாபமில்ல
    அன்பாய் மலர்ந்த கவிதைக்கு பாராட்டுக்கள்..!

    ReplyDelete
  10. காதல் பள்ளிக் கூடம் இன்பக் கவிதையைப் போல
    சிறப்பாகத் தொடரட்டும் தோழி :) வாழ்த்துக்கள்
    இதையும் கொஞ்சம் படியுங்களேன் .
    http://rupika-rupika.blogspot.com/2014/03/blog-post_12.html

    ReplyDelete
  11. அருமையான கவிதை..... பாராட்டுகள்.

    த.ம. +1

    ReplyDelete
  12. கிராமிய மணம் கமழும் அருமையான கவிதை அக்கா...

    ReplyDelete
  13. அன்புத் தோழியே இந்தக் கவிதை வரிகளைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள் பிடித்திருந்தால் மறக்காமல் தயவு செய்து தமிழ் மணத்திலும் ஓர் ஓட்டுப் போட்டு விடுங்கள் .http://rupika-rupika.blogspot.com/2014/03/blog-post_20.html மிக்க நன்றி .

    ReplyDelete