Friday 28 March 2014

மானும் மயிலும் !

கொத்தோட பூ பறிச்சி
கொண்டையில   தான் சொருகி..
கொல்லப்புறம் போயிருந்தேன்
கொடுக்காபுளி  பறிக்க...
பின்னாடி நிழல்வரவே
முன்னோடிப்போக துணிந்தேன்
என்னாடி கண்ணேயென
சொல்லாடி வந்தவனால்..
எங்கோடிப்போச்சுதடி
என் கோபம்...
தள்ளாடி நிக்குதடி காலும்.
அறுத்துப் போட்ட
கோழியாட்டம்..
அல்லாடுறேன் நானே...
அவனோ தப்புத்தாளம்
போட்டுக்கிட்டு..
துள்ளி ஓடுறான் மானா..
தொரத்தி வந்த
புள்ளி மானை
தொலைதூரம்
காணலையே...?
தொக்கி நிக்கும்
என் உசிரும்
பிழைச்சிடுமா ?
தோணலையே ?

20 comments:

  1. //கொத்தோட பூ பறிச்சி
    கொண்டையில தான் சொருகி..
    கொல்லப்புறம் போயிருந்தேன்
    கொடுக்காபுளி பறிக்க...//

    ஆரம்ப வரிகளே அருமையோ அருமை ! பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. கோபம் போக வைத்தவனுக்கு ஏக்கம் போக வைக்க தெரியாதா என்ன...?

    ReplyDelete
  3. மனம் மயக்கும் அழகான வரிகள்! சிறப்பான பாடல்! புல்லி என்பதை புள்ளி என்று திருத்தவும்! நன்றி!

    ReplyDelete
  4. பின்னாடி நிழல்வரவே
    முன்னோடிப்போக துணிந்தேன்
    என்னாடி கண்ணேயென
    சொல்லாடி வந்தவனால்..
    எங்கோடிப்போச்சுதடி
    என் கோபம்...
    தள்ளாடி நிக்குதடி

    அடிகள்(வரிகள்) கோர்ப்பு நன்றாக இருக்கிறது

    ReplyDelete
  5. ஆரம்பமே அசத்தலான வரிகள்..

    ReplyDelete
  6. சிறப்பான வரிகள் !வாழ்த்துக்கள் தோழி .
    த .ம .3

    ReplyDelete
  7. அருமை
    சரளமாக வந்து விழுந்த வார்த்தைகள்
    மனதைக் கொள்ளை கொண்டது
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. கொடுக்காபுளி போலவே சுவையான கவிதை...

    ReplyDelete
  9. பொதுவாக மான் தான் துரத்தப் படும்.அதுவும் பெண்ணுக்குத்தான் மான் உதாரணமாகக் கொள்ளப் படும் சில நேரங்களில் ஊன்றிப் படிக்கும்போது இம்மாதிரி தோன்றுமோ.?

    ReplyDelete
  10. மயிலைத் துரத்தும் மான்!!!

    ReplyDelete
  11. அழகிய நாட்டுப்புறப் பாடலில் காதலைச் சொல்லும் அருமையான வரிகள். பாராட்டுகள் சசி.

    ReplyDelete
  12. மிக அருமை சசி..எவ்ளோ அழகா எழுதுறீங்க..

    ReplyDelete

  13. வணக்கம்!

    மானும் மயிலும் விளையாடும் கவிபடைத்தீா்
    தேனும் சுளைகளையும் சோ்த்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  14. அருமையான காதல் கவிதை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. // அறுத்துப் போட்ட
    கோழியாட்டம்..
    அல்லாடுறேன் நானே... //

    கிராமத்து கவிதைக்கேற்ற பொருத்தமான உவமை! அதுசரி! இதனைப் பார்க்கும் மனதைரியம் உங்களிடம் வந்தது எப்படி?

    ReplyDelete
  16. வணக்கம் சகோதரி
    தங்களின் இந்த கிராமத்து மண்வாசனை மிக்க கவிதை படிப்பவர்களின் மனங்களையும் கொள்ளையடித்துச் செல்கிறது என்பதே உண்மை. அழகான காட்சிகளைக் கண்முன்னே அழகிய உவமைகளால் நிறுத்தியிருப்பது சிறப்பு. பகிர்வுக்கு நன்றீங்க சகோதரி..

    ReplyDelete