Tuesday 5 November 2013

பின்னலிடும் உன் நெனப்பு !


பக்கம் நின்னு பார்ப்பவரே
பார்த்து பேசி போனாலென்ன ?

காத்தடிக்க உன் மூச்சும் 
கனலாத்தான் நெருங்குதய்யா.

தூக்கத்தை துரத்திகிட்டு
தொலை தூரம் போனதய்யா.

அள்ளி முடிந்த கூந்தலிலே
பின்னலிடும் உன் நெனப்பு.

அடுக்களைக்கு நான் போக
அஞ்சரைப்பெட்டியோட கைகலப்பு.

படபடக்கும் நெஞ்சத்துல
பல நாளா தூக்கமில்ல.

பொழுது வரை காத்திருந்து
போத்திக்கிட்டு தூங்கும்மச்சான்.

புதுக்கலைய எனக்குந்தான்
சொல்லித்தந்தா என்ன மச்சான்.

அதிகாலை எழுந்து பாத்தா
வாசக்கோலமும் பேசிடுது.

அழுக்கெடுக்க நானும் போக
படிக்கல்லும் ஓடிடுது.

உன் நெனப்பே உணவாச்சி
ஊருக்கும் தெரிந்துபோச்சி.

ஒத்தையடிப் பாதையில
ஓரக்கண்ணால் பார்ப்பவரே.

ஒத்துமையா சேர்ந்து போக
ஒரு வழிய பாருமைய்யா.


35 comments:

  1. கிராமிய காதல் அருமை! சிறப்பான வரிகள்! பாராட்டுக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  2. அற்புதமாய் அமைந்ததென்ன

    பின்னலிடும் நினைவுகளும்

    எண்ணத்தினை எதார்த்தமாய்

    பதியம்போட்ட வித்தைதனை

    வித்திட்ட பாங்குமிங்கே எத்தனை

    அழகாய் மின்னுதிங்கே மனதிலே...

    வாழ்த்துக்களை நானுமிங்கே

    தாராளமாய் வீசுகின்றேன்...

    வரட்டுமிதுபோல் எண்ணற்ற

    அழகான எண்ணங்களும்

    இங்கு கவி எழுத்துக்களாய்...

    ReplyDelete
    Replies
    1. தாராளமான வாழ்த்துரை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  3. ஒத்துமையா சேர்ந்து போக
    ஒரு வழிய பாருமைய்யா.
    >
    சண்டை போடாதீங்கப்பா எதா இருந்தாலும் பேசி தீர்த்துக்கோங்க

    ReplyDelete
    Replies
    1. அக்கா யாருமே இங்க சண்டை போடவில்லையே...

      Delete
  4. ஒத்துமையா சேர்ந்து போக வழிசொல்லச் சொல்லும் கவிதை அழகு. பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க ஐயா ஒத்துமை தானே முக்கியம்.

      Delete
  5. எளிமையான வரிகள்.மனதை கொள்ளை கொள்கிறது.வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  6. வணக்கம் சகோதரி.
    அற்புதமா கிராமிய மண்வாசனை கமக்கும் கவியாய் உணர்ச்சி மாறாமல் தந்தது சிறப்பு. தங்களுக்கு எனது அன்பான வாழ்த்துக்களும் நன்றிகளும்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க சகோ.

      Delete
  7. //பக்கம் நின்னு பார்ப்பவரே
    பார்த்து பேசி போனாலென்ன ?// உங்களைப் பார்த்த களிப்பில் வார்த்தை வர மறுக்கிறது போல தோழி :)
    அருமை சசிகலா! எப்படிங்க இப்படி எழுத முடியுது?

    ReplyDelete
    Replies
    1. கிராமத்தில் வாசம் செய்து பாருங்க இப்படி எழுத வரும்.

      Delete
  8. மனம் கொள்ளை கொள்ளும் கவிதை. மண்வாசம் கமழ்கிறது

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  9. அதானே, சீக்கிரமா சாப்பாடு போடுற வழிய பாருங்க... சூப்பர் :)

    ReplyDelete
    Replies
    1. நமக்கு எங்கப்பா போட போறாங்க...ஹஹ

      Delete
  10. ஆகா!என்ன சொல்லிப் பாராட்ட சசிகலா?!

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சிங்க ஐயா. நன்றியும்.

      Delete
  11. ''..ஒத்துமையா சேர்ந்து போக

    ஒரு வழிய பாருமைய்யா....''
    Eniya vaalththu..
    Vetha.Elangathilakam.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  12. "பாட்டு சத்தம் கேக்கலையோ,
    பாட்டு சத்தம்... கேக்கலையோ "

    மெட்டில் பாடிப்பார்த்தேன்.. அருமையாக இருந்தது.. :-)

    ReplyDelete
    Replies
    1. அப்படியா மெட்டு போட இனி உங்களைத்தான் அழைக்க வேண்டும்.

      Delete
  13. வாசக் கோலமும் பேசிடுது.... கோலம் வாசமா இருக்கறதுக்காக சென்ட் எல்லாம் அடிப்பீங்களோ கோலத்து மேல... ஹா... ஹா...!

    ReplyDelete
    Replies
    1. இது ஓவர்... வாசல் கோலம் என்று படிக்க வேண்டும். ஆமா எங்க காணாம போயிட்டிங்க ?

      Delete
  14. கிராமிய மணம் வீசும் காதல் கவிதை. ரசித்தேன் சகோ.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  15. மண்வாசம் அடிச்சுவீசும்
    பெண்வாசக் கவிதையிது!
    உடன்பிறந்த கலைமனசு!
    மனம்போல வாழவேணும்.
    கற்பனையோ சொற்புனைவோ
    கவிதை மிகஅழகு!
    இன்னும் பலகவிதை
    எழுதிடவே வாழ்த்துகிறேன்


    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சிங்க அண்ணா. நன்றியும்.

      Delete
  16. உன் நெனப்பே உணவாச்சி
    ஊருக்கும் தெரிந்துபோச்சி.

    உடனடியாக நடவடிக்கை எடுங்க...!!

    ReplyDelete
    Replies
    1. கற்பனையா எழுதியது யாரிடம் போய் சொல்ல..ஹஹ

      Delete
  17. Replies
    1. வெகு நாட்களுக்கு பிறகு தங்கள் வருகை எப்படி இருக்கிங்க ?

      Delete
  18. வணக்கம்
    சகோதரி
    கவிதை அருமை ரசித்தேன் .......

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete