Friday 29 November 2013

பணியும் பனியும் !


பாவை முகம் சேமிப்பில் 
பதிந்த தடம் நினைவினிலே
வர்ணிக்க வார்த்தையுடன்
வடிவமைப்பை தேடுகிறேன்.

சொட்டுச்சொட்டாய்
பூ நனைய, சொக்கவைத்த
அந்த முகம்..
சொப்பனத்தில் எனையெழுப்பி
தேட வைத்த அந்த முகம்.

கிளையோடி காய் தழுவி
இலையாடி இடம்பெயர்ந்து
அருகம்புல்லில் படுத்துறங்கி
அழகாய் தொலைந்த பனிமுகமே.

தேடலென ஓடுகிறோம்
தேவி உனை ரசிப்பதில்லை.
உறங்கவைத்து ஓடியாடி
கண்ணாமூச்சி ஆடுகின்றாய்.

பனிமலரே உனை பார்த்திருக்க
பகலவனும் வந்து விட
ஒளி நிழலில் உடன் மாய்ந்த
உன் நினைவைத் தேடுகிறேன்.

33 comments:

  1. அழகிய சிந்தனை...

    ரசித்தேன்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

      Delete
  2. //பனிமலரே உனை பார்த்திருக்க பகலவனும் வந்து விட
    ஒளி நிழலில் உடன் மாய்ந்த உன் நினைவைத் தேடுகிறேன்.//

    நினைவலைகளின் அழகான தேடல் .... பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க ஐயா.

      Delete
  3. நினைவலைகள் ரசித்தேன்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

      Delete
  4. அழகாய் தொலைந்த பனிமுகம் தேடல் ரசனை....பாராட்டு.
    Eniya vaalththu....
    Vetha.Elangathilakam.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

      Delete
  5. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/11/blog-post_29.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க சகோ. தகவலுக்கு மிக்க நன்றி.

      Delete
  6. கிளையோடி காய் தழுவி
    இலையாடி இடம்பெயர்ந்து
    அருகம்புல்லில் படுத்துறங்கி
    அழகாய் தொலைந்த பனிமுகமே.

    அழகு மிளிரும் கவிதை..!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

      Delete
  7. உன் நினைவைத் தேடுகிறேன்.
    >>
    சீக்கிரம் கண்டுப்பிடி சசி.

    ReplyDelete
    Replies
    1. காலைல எழுந்து பனியை பிடிச்சி வையுங்க அக்கா.

      Delete
  8. பகலவனின் வரவால் அழகாய்த் தொலைந்ததோ பனிமுகம்...

    அருமையான சிந்தனை!
    அழகிய கவிதை!

    வாழ்த்துக்கள் தோழி!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

      Delete
  9. ரவியால் உருகும் பனிப்பெண்!

    ReplyDelete
  10. மரியான் படம் பார்த்தீங்களா என்ன?

    ReplyDelete
  11. Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

      Delete
  12. பனிமலரே உனை பார்த்திருக்க
    பகலவனும் வந்து விட//
    அழகான் பனி மலர்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

      Delete
  13. வணக்கம்

    கவிதையின் வரிகள் மிக அழகு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

      Delete
  14. எப்போதும் போலவே அழகான கவிதை. இப்போதெல்லாம் தினமும் வருவதில்லையே ஏன்?

    ReplyDelete
    Replies
    1. வெளியூர் பயணம் அதிகமாகிவிட்டது.

      Delete
  15. [[அருகம்புல்லில் படுத்துறங்கி
    அழகாய் தொலைந்த பனிமுகமே]]

    சிறு வயதில் எங்கள் வீட்டிற்கு எதிரில் இருக்கும் மைதானத்தில் காலை ஏழு மணிக்கு என் சகோதரர்கள் நண்பர்களுடன் கிரிக்கெட் ஆடும் பொது...நான் பார்த்து ரசித்ததை மேலே எழுதியுள்ளீர்கள்.
    தமிழ்மணம் +7

    ReplyDelete
    Replies
    1. விளையாட வயது ஒரு தடையில்லையே..

      Delete
  16. கிடைக்கும் வரை தேடுங்கள் அக்கா .. நல்ல கவிதை

    ReplyDelete