Thursday 30 May 2013

அச்சாணி இல்லாத தேரோட்டம் !


அச்சாணி இல்லாத தேரோட்டம்
அவன் போய் பார்த்தான்டி முன்னோட்டம்.

தேர் ஓடும் அழகைப்பார்
தெருவெல்லாம் கூட்டம் பார் - என
கூத்தாடி அவன் சொன்னான்

தேர் நிலையை காணோமடி
தேர் ஓட ரதவீதியும் போதாதடி

வடம் பிடிக்க ஆள் சேர்த்தான்
வண்ணக் கோலம் போடச்சொன்னான்

அலங்கரிக்க பூ பறித்தான்
ஆரவார பாட்டிசைத்தான்

வர்ணத்தை குழைத்தெடுத்தே
வடிவங்கள் செய்து வைத்தான்

உறவெல்லாம் வியந்துநிக்க
ஊர் மக்கள் வேடிக்கை பார்க்க
வார்த்தைகளில் வடம் பிடித்து
இழுத்துச்சென்றான் இல்லாத
தேர் அதனை...
வாய் ஜால மன்னனடி 
வம்பிழுத்தே சிரிக்கும் 
மாயக்கண்ணனடி.


34 comments:

  1. அச்சாணியில்லாத கற்பனைத்தேர் பற்றிய வர்ணனைகள் கற்கண்டாக இனித்தன. பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க ஐயா.

      Delete
  2. வடம் பிடிக்க ஆள் சேர்த்தான்
    வண்ணக் கோலம் போடச்சொன்னான்

    அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாதே..!

    அச்சாணியமாய் அவலமாய் நடுத்தெருவில் நிற்குமே..!

    ReplyDelete
    Replies
    1. வாய் ஜால மன்னன் ஆச்சே...!

      Delete
    2. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

      Delete
  3. வார்த்தைகளில் வடம் பிடித்த.. நன்று.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  4. வாய் ஜால மன்னன் வார்த்தைகளிலேயே வடம் பிடிச்சது ஜோரா இருக்கு.. இந்த கவிதைய படிக்கிறப்ப.. சின்ன குழந்தைகள் தேர் இழுக்கிற விளையாட்டும் நினைவுக்கு வருது.

    த.ம-3

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க நானும் சிறுவயதை நினைத்தே எழுதியது. நன்றிங்க.

      Delete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. //வர்ணத்தை குழைத்தெடுத்தே
    வடிவங்கள் செய்து வைத்தான்///

    அவன் வர்ணத்தை குழைத்தால் நீங்கள் வார்த்தைகளை குழைத்து அழகான கற்பனை தேரை எங்கள் மனத்திரையில் ஒட விடுகிறீர்களே

    ReplyDelete
    Replies
    1. கற்பனை தேர் அழகாக ஓடுகிறதா..? நன்றிங்க.

      Delete
  7. ///வாய் ஜால மன்னனடி
    வம்பிழுத்தே சிரிக்கும்
    மாயக்கண்ணனடி.///

    யார் அந்த கண்ணன் பெயர் சொல்லக் கூடாதா?

    ReplyDelete
    Replies
    1. மாயக்கண்ணனை தெரியாதா ? வெண்ணை திருடும் கள்வன்.

      Delete
  8. அச்சாணிஇல்லாததேர் ஓடுதுபாரு ! வார்த்தை ஜால மன்னனுக்கு சபாஸ்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றி தோழி.

      Delete
  9. எல்லோராலும் அது சாத்தியமில்லை
    அதற்கென தனித் திறன் வேண்டும்
    உங்களைப்போலவே....
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. ஐயாவின் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க ஐயா.

      Delete
  10. வார்த்தைகளில் வடம் பிடித்து
    இழுத்துச்சென்றான் இல்லாத
    தேர் அதனை...
    வாய் ஜால மன்னனடி “

    வார்த்தை ஜாலம் அருமை சசிகலா. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருக தோழி நன்றி.

      Delete
  11. வார்த்தை ஜாலம் என்கிறது இதுதானோ தோழி...:))).
    அருமை! அச்சாணி இல்லாத தேரதனை வார்த்தைகளால் இழுத்தவிதம் மிகச்சிறப்பு.

    ரசித்தேன். வாழ்த்துக்கள்!

    த ம.6

    ReplyDelete
    Replies
    1. இது இல்லங்க.
      தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றி தோழி.

      Delete
  12. வார்த்தை ஜாலத்தினால் தேர்பிடித்தான்.... நீங்களும் தான் கோர்வையான வார்த்தைகளால் கவிதைத் தேர் படைத்தீர்கள்! நன்று.....

    ReplyDelete
    Replies
    1. அப்படியா ...?
      தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  13. சின்ன வயசுல படிச்ச கண்ணன் பாடல்களை ஞாபகப்படுத்துகிறது...
    அருமை
    ரிம்ப நாளைக்கப்புறம் வந்திருக்கேன் வட பஜ்ஜி கிடைக்காதா என்ன :P

    ReplyDelete
    Replies
    1. வாங்க இனிப்பே கொடுக்கலாம். நன்றிங்க.

      Delete
  14. உங்க ஊரு தேரோட்டம் உள்ளபடி நல்லா எடுத்துரைதீங்க

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க ஊருக்கு தேரோட்டத்திற்கு போகமுடியவில்லை. இப்படியாவது இழுக்கலாம்.

      Delete
  15. இல்லாத தேருக்கு அச்சாணி எதற்கு?

    ReplyDelete
  16. // வார்த்தைகளில் வடம் பிடித்து
    இழுத்துச்சென்றான் இல்லாத
    தேர் அதனை...//

    சூப்பர்

    ReplyDelete
  17. வம்பிழுத்தே சிரிக்கும்
    மாயக்கண்ணனடி.//

    அருமையான கவிதை.

    ReplyDelete