Tuesday 28 May 2013

வண்ணங்களோடு !


குவியல்களுக்கிடையே 
பிடித்தது பிடிக்காது 
என அலசியபடி
ஏற்கனவே இருக்குமே
இருந்தால் என்ன 
புதிய வடிவமாய் 
இருக்கிறதே...

எனக்குப் பொருந்துமோ
எடுப்பாக இருக்குமோ
சம்பளக்காரனின் சட்டையை
கிழிக்கவைத்து...

புத்தம் புதிதாய் 
சுமந்து செல்கிறேன்.
எதிர்படும் ஜவுளிக்கடை
பொம்மை ஏளனமாய் 
சிரிக்கிறது.

தோழிகளின் விமர்சனங்களில்
சிக்கி கசங்கிப்போய்
அடைந்து கிடந்த பெட்டிச்
சீலைகளில் பத்தோடு 
பதினொன்றாக ...

அடுத்தடுத்த நிகழ்ச்சிகளில்
முதலிடம் பிடிக்க தகுதிவாய்ந்தது.
போயும் போயும் கல்யாணத்துக்கு
கட்டி வந்த கலரப்பாரு 
என்ற விமர்சனத்தில் கனத்துப் போகிறேன்.
மன எண்ணங்களை
வண்ணங்கள் காட்டுவதில்லையே
பின்பு ஏன் வண்ணங்களுக்கு முதலிடம்.


17 comments:

  1. எண்ணங்களை புரிந்து கொள்ளவே இயலாது.. மனம் கவர்ந்த வண்ணங்களைவிட எண்ணங்கள் அழகு.

    ReplyDelete
  2. வண்ணங்கள் = பெண்கள்

    நல்லதொரு கவிதை

    ReplyDelete
  3. எண்ணம் போலே வண்ணமும்...! வாழ்த்துக்கள் சகோ...

    ReplyDelete
  4. வண்ணங்கள் பற்றிய எண்ணங்கள் கவிதை நன்றாக இருந்தது

    ReplyDelete
  5. பட்டு ,ஆசைப்பட்டு, எடுக்கப்பட்டு, கட்டப்பட்டு ,இறுதியில்,கிழிகப்பட்டு போதுமா ?

    ReplyDelete
  6. ''...தோழிகளின் விமர்சனங்களில்

    சிக்கி கசங்கிப்போய்

    அடைந்து கிடந்த பெட்டிச்

    சீலைகளில் பத்தோடு

    பதினொன்றாக ...'''
    ஆசை யாரை விட்டது!.
    அருமை.
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  7. சரியான கேள்வி? எண்ணங்களை வண்ணங்கள் பிரதிபலிப்பது இல்லைதான்! அருமையான கவிதை! நன்றி!

    ReplyDelete
  8. அடுத்தடுத்த நிகழ்ச்சிகளில்
    முதலிடம் பிடிக்க தகுதிவாய்ந்தது.
    போயும் போயும் கல்யாணத்துக்கு
    கட்டி வந்த கலரப்பாரு

    அறியாமையினால் எழும் கேள்வி
    இதனால் அடுத்தவர்கள் படும் மனத் துயரை
    இம்மக்கள் அறிதலே நன்று தவிர வண்ணங்கள் தான்
    வாழ்வில் சிறப்பல்ல மனிதர்களுக்கு சிறந்த எண்ணங்களே
    சிறப்பானவை .அருமையான கவிதை வாழ்த்துக்கள் என்
    தோழிக்கு .

    ReplyDelete
  9. நமக்குப் பிடித்த வண்ணம் பிறருக்கு பிடிக்கவில்லையெனில், அவ்ர்களின் கேலியை அதை அவ்வண்ணமே ஒதுக்கி விட்டு நம் வண்ணத்தை நாமே ரசிப்போம்!எண்ணமே வண்ணமாகும்!
    (என்ன எழுதினேனோ,ஒண்ணும் எனக்கே புரியலே!)

    ReplyDelete
  10. எண்ணங்களை வண்ணங்கள் பிரதிபலிப்பதில்லைதான்.. ஆனாலும் பெண்கள் புடவை தேர்வுக்கு நாள் கணக்காலும் திருப்தி ஏற்படாது.

    த.ம-7

    ReplyDelete
  11. எண்ணங்களும் வண்ணங்களும் அழகுக் கவியாக..

    வண்ணங்களை காட்டி ஆசை வரவைக்கிறீர்களே :)))

    ReplyDelete
  12. பின்பு ஏன் வண்ணங்களுக்கு முதலிடம்...?
    அருமையான கேள்வி. இப்படி கேட்கப்பட்டதால் தான்
    வண்ணமற்ற வெண்மையை “ஒரு சிலர்“ தான்
    கட்டவேண்டும் என்பதை முறியடித்தார்கள்.

    கவிதை அருமையாக உள்ளது சசிகலா. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. எண்ணங்களும் வண்ணங்களும்......

    இன்றைய வண்ணம் நாளைக்கு பொருந்துவதில்லை! :(

    ReplyDelete
  14. //மன எண்ணங்களை
    வண்ணங்கள் காட்டுவதில்லையே//

    மன எண்ணங்களை முகத்தில் தோன்றும் வண்ணங்கள் காட்டுகிறேதே

    ReplyDelete
  15. \\சம்பளக்காரனின் சட்டையைக் கிழிக்கவைத்து\\

    ரசிக்கவைத்த உண்மை.

    \\மன எண்ணங்களை
    வண்ணங்கள் காட்டுவதில்லையே
    பின்பு ஏன் வண்ணங்களுக்கு முதலிடம்.\\

    அது புரியாமல்தானே இன்றும் புடவைக்கடையில் அலைமோதுகிறது கூட்டம்.

    ரசனையான கவிதை. பாராட்டுகள் சசிகலா.

    ReplyDelete
  16. மன எண்ணங்களை
    வண்ணங்கள் காட்டுவதில்லையே
    பின்பு ஏன் வண்ணங்களுக்கு முதலிடம்.//

    அதுதானே!

    ReplyDelete