Sunday 26 May 2013

சுகமான சுமைகள் !



சுமையென்று ஏதுமில்லை -எதையும்
சுகமாக நினைத்து விட்டால்.

கனவிலோர் உருகொண்டு
கருவினிலே சுமந்திடுவாள்
தாயவளுக்கு சேயும் சுகமான சுமையே.

மண்மீதினில் நமை சுமக்கும்
பூமாதேவிக்கு ஜீவராசிகளும் 
சுகமான சுமையே.

நீருண்டு வேர்பரவி 
நிழல் கொடுக்கும் மரங்களுக்கு
காய் கனிகள் சுகமான சுமையே.

வான் மழை சேமித்து
தாகம் தீர்க்கும் நதியும்
கடலோடு சேர்வதும் 
சுகமான சுமையே.

கதிர் வாழ் நெல்மணிகள்
நிலங்களுக்கு சுகமான சுமையே.

மகனாய் மகளாய் இருக்கும் நாமும்
மனிதம் மரித்துப்போகாமல் காப்போம்.
ஈன்றவரைக் காத்திடுவோம் 
சுகமான சுமையாக.

40 comments:

  1. அழகான சுமைகள்...
    அர்த்தம் தரும் சுமைகள்...
    பிறருக்கு மகிழ்ச்சியைத் தரும் சுமைகள்...

    ரசித்து படித்தக் கவிதை

    அருமை !

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  2. சுமையென்று ஏதுமில்லை -எதையும்
    சுகமாக நினைத்து விட்டால்.

    சுகமான சுமைகள்..!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  3. //மகனாய் மகளாய் இருக்கும் நாமும்
    மனிதம் மரித்துப்போகாமல் காப்போம்.
    ஈன்றவரைக் காத்திடுவோம்
    சுகமான சுமையாக.//

    அருமையான வரிகள்.

    //சுமையென்று ஏதுமில்லை -எதையும் சுகமாக நினைத்து விட்டால்.//

    பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க ஐயா.

      Delete
  4. சோம்பேறிகளுக்கு இமைப்பது கூட சுமைதான்.உறுதி உடையவர்க்கு மலை அசைப்பது கூட இமையை அசைப்பது போல்தான். நல்ல கவிதை சசிகலா

    ReplyDelete
    Replies
    1. தெளிவு தரும் பின்னூட்ட வரிகள் நன்றிங்க.

      Delete
  5. //சுகமான சுமைகள் !//

    தலைப்புக்கு மிகவும் பொருத்தமான படத்தேர்வு. ஸ்பெஷல் பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி நன்றிங்க ஐயா.

      Delete
  6. சுகமான வரிகள் அருமை... வாழ்த்துக்கள் சகோதரி...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  7. சுமையென்று எண்ணினால் எண்ணமும் சுமை. சுமையில் சுகமானவற்றை அடையாளம் காட்டும் கவிதை.

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க எண்ணமும் சுமையாகும். தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  8. Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  9. அருமை அருமை
    இது போன்ற அருமையான கவிதைக்குச்
    சொற்களைப்போல
    தாங்கள் சொல்லிச் சென்ற அனைத்தும்
    சுவையான சுமைகளே
    மனம் கவர்ந்த படைப்பு
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க ஐயா.

      Delete
  10. Replies
    1. மிக்க மகிழ்ச்சிங்க ஐயா.

      Delete
  11. பெற்றவர்களை பாரமாய் நினைக்கும் பாறை மனங்களுக்கு உறைக்கட்டும் வரிகள் ஒவ்வொன்றும்... பாராட்டுகள் சசிகலா.

    ReplyDelete
    Replies
    1. உணர்ந்தால் நன்று தாங்க. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  12. சுகமான சுமைகள் ஒவ்வொன்றையும் படிக்க மனம் நிறைந்தது. மிகச் சரியாகச் சொல்லியிருக்கிங்க தென்றல்! கவிதைக்குப் பொருத்தமான படமும் சிறப்பு!

    ReplyDelete
    Replies
    1. நிறைவாக வாழ்த்தியமைக்கு நன்றிங்க சகோ.

      Delete
  13. சுகமான சுமைகள்.... சிறப்பான கருத்து கொண்ட பா.... வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  14. கனவிலோர் உருகொண்டு
    கருவினிலே சுமந்திடுவாள்
    தாயவளுக்கு சேயும் சுகமான சுமையே.

    உண்மை!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க ஐயா.

      Delete
  15. மகனாய் மகளாய் இருக்கும் நாமும்
    மனிதம் மரித்துப்போகாமல் காப்போம்.//உண்மைதான் மனிதம் போற்றி வாழ வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  16. மகனாய் மகளாய் இருக்கும் நாமும்
    மனிதம் மரித்துப்போகாமல் காப்போம்.
    ஈன்றவரைக் காத்திடுவோம்
    சுகமான சுமையாக.

    இதற்க்கு கொடுத்து வைக்க வேண்டும் தோழி .
    பல ஆயிரம் தலங்களுக்கு சென்ற புண்ணியத்தை
    அடைவார்கள் இவர்கள் .அருமையான சிந்தனைக்
    ¨கவிதை வாழ்த்துக்கள் என் தோழி !

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க .

      Delete
  17. அருமையான கவி படைத்தீர்கள் தோழி!
    மண்ணுக்கு மரம் பாரமா? மரத்திற்கு கிளை பாரமா?
    பெற்றோர்களுக்கு பிள்ளைகளும் பிள்ளைகளுக்கு பெற்றோரும் பாரமென்றால் தனக்குத் தானே பாரம்தான்.

    ரசித்தேன். தொடருங்கள்... வாழ்த்துக்கள் தோழி!

    த ம. 8

    ReplyDelete
    Replies
    1. தகுந்த பாடலை நினைவுபடுத்தியமைக்கு நன்றி தோழி.

      Delete
  18. மகனாய் மகளாய் இருக்கும் நாமும்
    மனிதம் மரித்துப்போகாமல் காப்போம்.
    ஈன்றவரைக் காத்திடுவோம்
    சுகமான சுமையாக.
    >>
    தப்பு சசி! சுகமான சுமையாய் கூட தெரியக்கூடாது.., அது சுமையே அல்ல.., நம் கடமை. கடசி வரி தவிர மற்றப்படி கவிதை சூப்பர்

    ReplyDelete
    Replies
    1. முதியோர் இல்லத்திற்கு அனுப்புவதை விட சுமையாக நினைத்தாவது சுமக்கச்சொல்கிறேன் அக்கா.

      Delete
  19. அருமையான கவிதை.
    வாழ்த்துக்கள் சசிகலா.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றி தோழி.

      Delete
  20. நினைவில் வந்த பாடல் வரிகள் இவை .........

    காது கொடுத்துக் கேட்டேன்
    ஆஹா குவா குவா சத்தம்
    ... ... ....
    சுமப்பதுதான் சுகமென்று
    மனதுக்குள்ளே ரசிக்கின்றேன்
    - பாடல்: வாலி (படம்: காவல்காரன்)

    ReplyDelete
    Replies
    1. நல்ல பாடலை நினைவு படுத்தியமைக்கு நன்றிங்க.

      Delete