Friday 24 May 2013

மாய உலகம் !



விழிக்குளத்தில் மீனிரண்டு
மானாட்டம் துள்ளியோடி
மதுர வீதிக் கடைதனிலே
மல்லிகையை பார்த்து நிக்க.

மனம் பறித்தவன் வந்தானோ ?
சரமாய் தொடுத்தே கையில் தந்து
சறுக்கி விழும் எண்ணத்தில்
சம்மணமிட்டு அமர்ந்தானோ ?

காவலாய் இமையோ
கொக்கரித்து தான் நிற்க
கண்ணுறக்கம் மறந்தேனே
களவு போனது நிஜம் தானோ?

எண்ணத்தில் மிதந்தபடி
ஏடுகளில் வாழ்கின்றேன்.
கன்னத்தில் பொட்டுமிட்டு
நெற்றியிலதை தேடுகிறேன்.

பாதைக்குள் பாதை தேடும்
புதுப்பாதை காதலடி...
கண்ணிரண்டும் திறந்திருந்தும்
காட்சி தேடும் மாய உலகமடி.

15 comments:

  1. மனம் களவு போனது நிஜம் தான்...

    ரசித்தேன் சகோதரி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. தமிழ்மணம் +1 இணைத்து விட்டேன்... நன்றி...

    ReplyDelete
  3. பாதைக்குள் பாதை தேடும்
    புதுப்பாதை காதலடி...
    கண்ணிரண்டும் திறந்திருந்தும்
    காட்சி தேடும் மாய உலகமடி.

    காதலுக்கு இன்னுமொரு அழகான உவமை
    மிகவும் ரசித்தேன் வாழ்த்துக்கள் தோழி .

    ReplyDelete
  4. பாதைக்குள் பாதை தேடும்
    புதுப்பாதை காதலடி...
    கண்ணிரண்டும் திறந்திருந்தும்
    காட்சி தேடும் மாய உலகமடி.

    மாயத்தேடல் ..!

    ReplyDelete
  5. காதல் வயப்பட்டவர்களின்
    குழப்ப மன நிலையை மயக்க நிலையை
    சொல்லிப்போகும் கவிதை
    அருமையிலும் அருமை
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. ''..பாதைக்குள் பாதை தேடும்

    புதுப்பாதை காதலடி...

    கண்ணிரண்டும் திறந்திருந்தும்

    காட்சி தேடும் மாய உலகமடி...''
    மாய உலகில் சிக்கி வெளியேறுதல் தானே வாழ்வு.
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  7. எண்ணத்தில் மிதந்தபடி
    ஏடுகளில் வாழ்கின்றேன்.
    கன்னத்தில் பொட்டுமிட்டு
    நெற்றியிலதை தேடுகிறேன்....
    அழகான வரிகள் தோழி! பாராட்டுக்கள்!!

    ReplyDelete
  8. பாதைக்குள் பாதை தேடும்
    புதுப்பாதை காதலடி...//
    காதலுக்கு பாதை எது கண்கலேது? அருமை

    ReplyDelete
  9. கண்ணிரண்டும் திறந்திருந்தும்
    காட்சி தேடும் மாய உலகமடி.


    உண்மையை அழகாகச் சொன்னீர்கள்.

    ReplyDelete
  10. மாயஉலகம் காதல்... அழகிய கவிதை

    ReplyDelete
  11. மாயவுலகின் கனவதில் மனம் கலந்து
    மாதவள் கொண்ட மயக்கம் வியக்கும்(உ)ன்
    பாதரும் பரவசம் பாகாய் இருக்கிறதே
    ஏதினி பேசவுள்ளது சொல்!...

    அருமையாக இருக்கிறது மாய உலகம்.
    மனதை மயக்கிவிட்டது. சொக்கிப்போய்விட்டேன் தென்றலே!
    வாழ்த்துக்கள்!!!

    த ம. 8

    ReplyDelete
  12. பாதைக்குள் பாதை தேடும் புதுப்பாதை காதலடி! அருமையான உவமை! சிறப்பான கவிதை! நன்றி!

    ReplyDelete
  13. காதல் வந்திட்டா எல்லாம்தான் மாறிடுதே.. அருமை!

    த.ம-9

    ReplyDelete
  14. பாதைக்குள் பாதை தேடும்
    புதுப்பாதை காதலடி.../ வித்தியாசமான சிந்தனை..

    ReplyDelete