Monday 20 May 2013

எல்லாமுமாய் நீயே !


பச்சை பசுந்தளிர் புல்லின்மீது
பனித்துளிப் படுத்திருக்கும்!

பாசங்கொண்ட இதயம்தனிலே
நினைவுகள் வாழ்ந்திருக்கும்!

இமைமூடினும் எண்ணமேனோ
காத்துப் பார்த்திருக்கும்!

கடந்தவையாவும் கூடஇல்லை
ஆயினும் வாழ்ந்திருக்கும்.

எங்கோ எதையோ தொலைத்த
மாயத் சோகத்தடுமாற்றம்!

ஆருயிர் ஓருயிர் என்னுயிர்தேடி
என்றும் போராட்டம்!

கனவில் நினைவில் கவிதைவடிவில்
நிழலாய் உணர்வின் வருகை!

கண்டதும் நடந்ததும் கனவா நனவா
காட்சியில் காணவில்லை!

எதையும் மறக்கவும்
உதறவும் முடியாதெனினும்
எல்லாமுமாய் நீயே
இருப்பாய் எம்தமிழே.

16 comments:

  1. தமிழ் வாழ்க!
    நல்வாழ்த்து.
    ரெம்ப பிஸியோ!!!!!
    நல்வரவு என்பக்கத்திறகு!

    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  2. பாசங்கொண்ட இதயம்தனிலே
    நினைவுகள் வாழ்ந்திருக்கும்!//
    உண்மை.

    தமிழ் மேல் பாசம் வாழ்க!

    ReplyDelete
  3. உங்களிடம் தமிழ்
    அப்படித்தானே இருக்கிறது
    மனம் கவர்ந்த கவிதை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. என்றும் உங்களிடம் வாழ்ந்திருக்கும்...

    வாழ்த்துக்கள் சகோதரி...

    ™2

    ReplyDelete
  5. ம்... அழகிய கவிதை...
    தமிழ் எல்லாற்றிலும் கலப்பதுதான்...

    ReplyDelete
  6. கனவில் நினைவில் கவிதைவடிவில்
    நிழலாய் உணர்வின் வருகை!

    -- எனக்கு மிகவும் பிடித்த வரிகள்

    ReplyDelete
  7. அமிழ்த மொழி எங்கள்
    அன்னை தமிழினை அழகாய்
    அடிக்கொரு உயிர் ஊற்றி
    அன்பாய் வடித்தாய் கவியே
    அனுதினம் பாடினும் அழியா
    அறத்தின் மெய்ப்பொருள் போலே
    அடி நெஞ்சம் வரை ரசித்தேன்
    ஆன்றோரும் உன்னை வாழ்த்தட்டும்...!


    அழகிய கவிதை சசிகலா வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. உணர்வொடு ஒன்றி உயிரில் கலந்து
    மனமதை நிறைக்கும் மகிழ்வான தமிழே!
    தினம்பாடும் தோழிநீ! தருங்கவியோ தேந்துளி!
    உனைநாடிவருகிறேன் வாழ்த்துகிறேன்! வாழிநீ!...

    த ம 4

    ReplyDelete
  9. எதையும் மறக்கவும்
    உதறவும் முடியாதெனினும்
    எல்லாமுமாய் நீயே
    இருப்பாய் எம்தமிழே.- Nice.,

    ReplyDelete
  10. அழகிய கவிதை வரிகள் உங்களிடம் உறைந்திருக்கும்! சிறப்பான கவிதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  11. ஓ... தமிழா...

    தமிழ் தரும் சந்தோஷம்தான் எத்தனை, எத்தனை?

    ReplyDelete
  12. அழகிய கவிதை சசிகலா வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. எதையும் மறக்கவும்
    உதறவும் முடியாதெனினும்
    எல்லாமுமாய் நீயே
    இருப்பாய் எம்தமிழே.

    நான் ரசித்த வரிகள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. இவ்வளவு பற்றா மொழி மீது.ஆச்சரியாமய் இருக்கிறாது.நல்ல சிந்தனை,வாழ்த்துக்கள்.

    ReplyDelete