Sunday 19 May 2013

அன்பே ஆயுதம் !


சோம்பல் என்ன உடன்பிறப்பா
சோறிடுவார் பார்ப்பர் உனை வெறுப்பா

உழைக்க வேணும் கையாலே
உயர வேண்டும் தொழிலாலே

பண்பாளர் காட்டிய வழியதுவே
பயணம் தொடர்ந்தால் வாராதே பழியதுவே

உனக்கென வகுத்த ஒரு பாதை
ஊர் சொல்லுக்கு கொடுக்காதே காதை

துணிவை மட்டுமே துணையெனக்கொள்
துணிந்து நின்றால் வெற்றி நிச்சயம் செல்

பணம் மட்டுமே வாழ்வல்ல -உன்
பாதையில் ஒழுக்கமிருப்பின் தாழ்வல்ல

அன்பே ஆயுதம் உணர வேண்டும்
அதிலே அகிலத்தை வெல்ல வேண்டும்.

21 comments:

  1. //உழைக்க வேணும் கையாலே
    உயர வேண்டும் தொழிலாலே// ;)

    அன்பே ஆயுதம். அழகான படைப்பு. பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. தங்கள் முதல் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க ஐயா.

    ReplyDelete
  3. துணிவை மட்டுமே துணையெனக்கொள்
    துணிந்து நின்றால் வெற்றி நிச்சயம் செல்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  4. அன்பே அனைத்தும்...

    /// உனக்கென வகுத்த ஒரு பாதை
    ஊர் சொல்லுக்கு கொடுக்காதே காதை ///

    அருமை... வாழ்த்துக்கள் சகோதரி...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  5. கடைசி இரண்டு வரிகள் அட்சர லட்சம் பெறும் தென்றல்! மிக அழகான கருத்துக்களை கவிதையாய்ச் சொல்லியிருக்கீங்க. பாராட்டுகளும், வாழ்த்துக்களும்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  6. அன்பொன்றே
    என்றும்
    அழியாத ஆயுதம்...
    ==
    அருமையான வரிகள் தங்கை சசி...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  7. அருமை! எமக்கு! பெருமை உமக்கு!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க ஐயா.

      Delete
  8. அழகிய கருத்தினைக்கூறினீர்கள் தோழி!
    அன்பை ஆயுதமாயோ அஹிம்சையாயோ கொண்டால் வெற்றி பலமடங்கு!
    வாழ்த்துக்கள்!!!

    த ம 6

    ReplyDelete
  9. அருமையாச் சொன்னீங்க!

    ReplyDelete
  10. அன்பே ஆயுதம் உணர வேண்டும்
    அதிலே அகிலத்தை வெல்ல வேண்டும்.//

    நன்றாக சொன்னீர்கள் அன்புதான் அனைத்தும்.

    ReplyDelete
  11. நல்லதொரு தன்னம்பிக்கை கவிதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  12. கவிதை வரிகள் அருமை....

    ReplyDelete
  13. "உழைக்க வேணும் கையாலே
    உயர வேண்டும் தொழிலாலே ...... அன்பே ஆயுதம்.... பல நல்ல கருத்துக்களை எடுத்துச் சொல்கிறது கவிதை.

    ReplyDelete
  14. அன்பின் சசிகலா - அருமை அருமை - அறிவுரைக் கவிதை அருமை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  15. "உழைக்க வேணும் கையாலே
    உயர வேண்டும் தொழிலாலே


    அருமையான கருத்து நிறைந்த கவிதை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete