Thursday 16 May 2013

கோடையிலும் வசந்தம் !

ஆத்தங்கர காத்திருக்கு
அரசமர நிழளிருக்கு
அழுக்கெடுக்க போனபுள்ள
அர நாளா காணவில்ல.

அங்கென்ன ஒரு கூட்டம்
நடக்குது பார் கரகாட்டம்
குளிக்க வந்த கோமணான்டி
குரங்காட்டம் மரக்கிளையில்
ஆடு மேய்க்க வந்த கூட்டம்
அரை வட்டம் போட்டு நிக்க...

சோடி சேர்ந்த புது ஜோடி
சோழியாட்டம் கண்ணுருட்டி.
காவக்காரன் கொம்போடு
காடு கறவு வம்போடு
அந்தோ போகும் மாட்டைப்பிடி
அரைகூவல் கேட்டுடிச்சே...
கோடை வெயில் தாங்கலியே
இந்த பய புள்ளைங்க குசும்பு ஓயலியே.


28 comments:

  1. வித்தியாசமாயிருக்கு .....

    ReplyDelete
    Replies
    1. அப்படியா மகிழ்ச்சிங்க. தங்கள் வருகைக்கு நன்றி தோழி.

      Delete
  2. படமும் அதற்கான விளக்கமாக அமைந்த
    கவிதையும் மனதுக்குள் தாளம் போடவைத்தன
    சொற்ஜாலம் சொக்கவைத்தது
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன். தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி ஐயா.

      Delete
  3. அழுக்கெடுக்க போனபுள்ள
    அர நாளா காணவில்ல....

    சோடி சேர்ந்த புது ஜோடி
    சோழியாட்டம் கண்ணுருட்டி...

    அழகான வார்ப்புகள்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  4. அருமை !! பாராட்டுக்கள்.//

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  5. அன்புத் தங்கை சசி..
    அழகான கிராமியப் பாடல்..
    நெஞ்சை வசமாக்குகிறது வரிகள்...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மிகவும் மகிழ்ந்தேன் நன்றிங்க அண்ணா.

      Delete
  6. பய புள்ளைங்க குசும்பு கோடையில் வசந்தம்!
    நல்ல கற்பனை!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  7. ஒரு கிராமத்துக்கு போய் வந்த உணர்வு சசி. படமும் கவிதையும் அழகு.

    ReplyDelete
    Replies
    1. கிராமங்கள் கூட இப்போதெல்லாம் கிராமம் மாதிரி இல்லங்க அது தான் வருத்தம். தங்கள் வருகைக்கு நன்றிங்க.

      Delete
  8. தோழி... உங்க கிராமியப் பாக்களில் மனம் சிக்கித்தவிக்கிறேன் நான். அற்புதமாய் வார்த்தைகளை சுழற்றிப்போட்டு மனசை பந்தாடுறீங்க... மிகவே ரசித்தேன். வாழ்த்துகள்!

    த ம 5

    ReplyDelete
    Replies
    1. இப்படி தங்கள் வாழ்த்து மழையில் நனைய வார்த்தைகளோடு நான் சிக்கித் தவிக்கிறேன். தங்கள் வருகைக்கு நன்றி தோழி.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  9. கோடையையும் தணித்துவிடும் உங்களின் கவிதை சசிகலா.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையை விட குளுமை வேறென்ன தோழி. நன்றி தோழி.

      Delete
  10. கிராமிய பாடல்ல கலக்கறிங்க.. வாழ்த்துக்கள்!

    த.ம-7

    ReplyDelete
    Replies
    1. வரிகளிலாவது கிராமியம் வாழட்டும் என்று தான் நன்றி தோழி.

      Delete
  11. கோடை வெயில் தாங்கலியே
    இந்த பய புள்ளைங்க குசும்பு ஓயலியே.//

    ஆஹா! குழந்தைகளுக்கு கோடை விடுமுறை விட்டாச்சு, அடுத்து அடுத்து என்று அலுக்காத விளையாட்டு விளையாடும் குழந்தைகளுக்கு வெயில் தெரியாது. மரத்தடியும், குழந்தைகளின் சந்தோஷமும் மிக அருமை.
    கவிதை அருமை.

    ReplyDelete
  12. கிராமிய மணம் கமழும் பாடல் ரசிக்கும் விதம் இருக்கிறது வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. கோடை வெயில் தாங்கலியே
    இந்த பய புள்ளைங்க குசும்பு ஓயலியே.

    கோடையில் வசந்தமாய் கவிதை..!

    ReplyDelete
  14. அருமை... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  15. எளிமையான வார்த்தைகள்ல அருமையான ரசிக்க வைக்கிற கவிதை தந்திருக்கீங்க தென்றல்!

    ReplyDelete
  16. ஆத்தங்கர காத்திருக்கு
    அரசமர நிழளிருக்கு
    அழுக்கெடுக்க போனபுள்ள
    அர நாளா காணவில்ல.

    அங்கென்ன ஒரு கூட்டம்
    நடக்குது பார் கரகாட்டம்

    வரிகளில் சந்தம் அருமையாய் அர்த்தப் பட விழுந்துள்ளது .
    வாழ்த்துக்கள் தோழி .

    ReplyDelete