Wednesday 15 May 2013

எண்ணங்களோடு !


சப்தங்களை புறந்தள்ளி
சாக்கடைகளை தாண்டி
மன உளைச்சலுக்கு நடுவே
மயான அமைதி தேடும் மனம்.

அகம் தொடும் நிகழ்வுகள்
அங்காடிப் பொருளாய் காட்சிகள்
அங்குமிங்குமாய் சேமித்த வார்த்தைகள் 
தேர் இழுக்கும் வடமாய்...

எதையும் தள்ளிடவும் இயலாது
கோர்த்தனைத்தையும் சரமாக்கவும் முடியாது
உண்மைக்கென சிலவும்
தியாகமாய் பலவும்
சில பல பெருகி சிதறல்களாய்

கம்பீரமாய் விரல் சிறைக்குள்
எழுத்தாணி எழுந்து நிற்கிறது
எண்ணங்களுக்குள் தள்ளாடியபடி நான்.


20 comments:

  1. manathukkul pidipatta vaarthaigalai vadikka viralkalil pidipattu ullatho paenaa... arumai..!

    ReplyDelete
  2. கவி புனையும் மனதை அழகாய் எடுத்து சொல்லும் அருமையான வரிகள். அழகு வரிகள்.

    ReplyDelete
  3. கவிதை தோன்றும் தருணத்தைச் சொல்லும் அழகே தனிதான்!

    ReplyDelete
  4. /// உண்மைக்கென சிலவும்
    தியாகமாய் பலவும்
    சில பல பெருகி சிதறல்களாய் ///

    அருமை... வாழ்த்துக்கள் சகோதரி...

    ReplyDelete
  5. எதையும் தள்ளிடவும் இயலாது
    கோர்த்தனைத்தையும் சரமாக்கவும் முடியாது
    உண்மைக்கென சிலவும்
    தியாகமாய் பலவும்
    சில பல பெருகி சிதறல்களாய்
    தேர் இழுக்கும் வடமாய்...
    எண்ணச்சிதறல்கள்...!

    ReplyDelete
  6. எழுத்தாணி எழுந்து நிற்கிறது எண்ணங்கள் கவிதையாக உருபெற்றன.....

    ReplyDelete
  7. எழுத்தில் சொல்ல இயலாத
    எண்ண அலைமோதும் மன நிலையை
    சொல்லிச் சென்றவிதம் மனம் கவர்ந்தது
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. மனதைப் பற்றி அழகாக யோசித்துள்ளீர்கள்

    ReplyDelete
  9. சப்தங்களை புறந்தள்ளி
    சாக்கடைகளை தாண்டி
    மன உளைச்சலுக்கு நடுவே
    மயான அமைதி தேடும் மனம்.// உண்மையான வரிகள்! சிறப்பான கவிதை! நன்றி!

    ReplyDelete
  10. சிறைப்படுத்தினாலும் சிதையாதது சிந்தனை!
    எத்தனை இடர் இரைச்சலுக்குள்ளும் மனமது இறை சிந்தனையில் அல்லது பிடித்துப்போன ஒன்றில் ஒன்றிவிடுமே. அதுபோல் எழுத நினைத்தால் அக்கம் பக்கம் பிரபஞ்சமே அந்த ஒற்றைப் புள்ளிக்குள் அடங்கிவிடும்.

    அழகிய வார்த்தைக்கோர்வையுடன் அருமையான கவி படைத்தீர்கள். நல்ல சிந்தனை. மிகச்சிறப்பு தோழி! வாழ்த்துக்கள்!

    த ம 4

    ReplyDelete
  11. ''..கம்பீரமாய் விரல் சிறைக்குள்

    எழுத்தாணி எழுந்து நிற்கிறது

    எண்ணங்களுக்குள் தள்ளாடியபடி நான்....
    arumai vatikal. nal vaalththu...
    Vetha.Elangathilakam.

    ReplyDelete
  12. அருவியாக வந்து வார்த்தைகள் கொட்டிட வாழ்த்துக்கள் என் தோழிக்கு !

    ReplyDelete
  13. மயான அமைதி தேடும் மனம் = மௌனத்தை நாடும் மனம்!மௌன சுகத்தை நாடும் மனம்.

    கவிதை பிடித்திருந்தது. 'எண்ணங்களின் நடுவே மயானத்தைக் கொண்டுவராமல் மௌனத்தைக் கொண்டுவந்தால்...?' என்ற எண்ணம் எனக்கு வந்தது! :))

    ReplyDelete
  14. முன்பை விட இப்போதெல்லாம் கவிதையில் ஒரு அழுத்தம் கூடுதலாக தெரிகிறது. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. கம்பீரமாய் விரல் சிறைக்குள்
    எழுத்தாணி எழுந்து நிற்கிறது
    எண்ணங்களுக்குள் தள்ளாடியபடி நான்.

    அழகு!

    ReplyDelete
  16. எண்ணங்களுக்குள் தள்ளாடினாலும், எழுதும்போது நன்றாக எழுதுகிறீர்கள்!
    பாராட்டுக்கள்!

    ReplyDelete
  17. கம்பீரமாய் விரல் சிறைக்குள்
    எழுத்தாணி எழுந்து நிற்கிறது
    எண்ணங்களுக்குள் தள்ளாடியபடி நான்.
    //இரசித்தேன்!// நன்றி!

    ReplyDelete