Tuesday 14 May 2013

உன் நினைவின்றி !


நீரில்லா புவியில்
நினைவில்லா உடலில்
கையால் நடந்து
காலால் உண்டு
சுவாசமின்றி வாழ்வது
எப்படி சாத்தியமோ
அவ்விதம் சாத்தியமானது
உன் நினைவின்றி வாழ்வதும்
உன்னிடம் பேசாமல் இருப்பதும்.


14 comments:

  1. சாத்தியமில்லை என்பதற்கு அடுக்கிய
    உவமைகள் அருமையானவை
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றி ஐயா.

      Delete
  2. அருமையான மன உணர்வை சொல்லும் கவிதை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றி தோழி.

      Delete
  3. மனதை தொடும் நினைவுகள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  4. இனிய வணக்கம் தங்கை சசி...
    விடுமுறைப் பயணம் நல்லபடியாக முடிந்ததா..
    ===
    சுருங்கச் சொன்னாலும்
    அருமையாக சொல்லியிருகீங்க...
    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் அண்ணா. தங்கள் நலன் மற்றும் அண்ணி குழந்தைகள் நலன் அறிய ஆவல்.

      Delete
  5. உள்ளத்தின்
    உணர்வுகளை
    உரித்துச்சொல்லும்
    உன்னதப்ப்டைப்பு.

    பராட்டுக்கள்.
    வாழ்த்துகள்.
    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  6. உன் நினைவின்றி வாழ்வதும்
    உன்னிடம் பேசாமல் இருப்பதும்.
    எத்தனை சாத்தியமற்றது என்று அருமையான கவிதை..!
    பாராட்டுக்கள்..

    ReplyDelete
  7. சாத்தியமில்லாதனவற்றை சாத்தியப்படுத்துவதுதானே அன்பு.... அருமை சசிகலா..

    ReplyDelete
  8. சுட்டிய உவமைகள் அனைத்தும் வெல்லக் கட்டிகள்!

    ReplyDelete
  9. அசாத்தியக் கூறுகளால் அன்பின் வெளிப்பாட்டை அழுந்த விளக்கிய விதம் கண்டு வியக்கிறேன். பாராட்டுகள் சசிகலா.

    ReplyDelete