Monday 13 May 2013

துளித் துளியாய் !



வலிய சென்று வாங்கியது
வலிக்கும் நினைவுகள்.
பட்ட மனதை தேற்றும் விந்தை
கற்றிருப்பின் வாராயோ...?

சூரிய முத்தத்திற்கு
காத்திருக்கும் பனித்துளியாக  நான்.

உன் வசம்
வார்த்தையும் தன்னை 
இழக்கிறது நீயே பேசு.

கெஞ்சவும் கொஞ்சவும்
உரிமையுள்ளவனே
-- 
கதைக்கச் சொல்கிறாய்
எனக்கு கவிதையைத் தவிர
ஏதும் தெரியாதே.

நமக்கான நெருக்கத்தை
உணர வேண்டுமாம் பிரிவும்.
அதன் ஆசையும் நிறைவேற்ற
நான் இருக்கிறேன்...

12 comments:

  1. கதைக்கச் சொல்கிறாய்
    எனக்கு கவிதையைத் தவிர
    ஏதும் தெரியாதே.//
    அருமையான கவிதை.


    ReplyDelete
  2. நமக்கான நெருக்கத்தை
    உணர வேண்டுமாம் பிரிவும்.
    அதன் ஆசையும் நிறைவேற்ற
    நான் இருக்கிறேன்...
    ரசனையான வரிகள்.. அருமை சசி.

    ReplyDelete
  3. குளம்பிய கவிதை. குளப்பம் தீரட்டும்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  4. /// சூரிய முத்தத்திற்கு
    காத்திருக்கும் பனித்துளியாக நான். ///

    ரசிக்க வைக்கும் வரிகள் பல...

    வாழ்த்துக்கள் சகோதரி ...

    ReplyDelete
  5. நெருக்கத்தை
    உணர வேண்டுமாம் பிரிவும்.
    அதன் ஆசையும்

    ரசனை வரிகள் ரசிக்க வைத்தது

    ReplyDelete
  6. //எனக்கு கவிதையைத் தவிர
    ஏதும் தெரியாதே.//

    //நமக்கான நெருக்கத்தை
    உணர வேண்டுமாம் பிரிவும்.//

    அருமையான வரிகளுடன் மிகச்சிறப்பான கவிதை. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  7. கதைக்கச் சொல்கிறாய்
    எனக்கு கவிதையைத் தவிர
    ஏதும் தெரியாதே.

    கவிதையே போதுமே ..! வாழ்த்துகள்...

    ReplyDelete
  8. நமக்கான நெருக்கத்தை
    உணர வேண்டுமாம் பிரிவும்.
    அதன் ஆசையும்

    ஊடல் இருந்ததால் தான்
    கூடலின் அருமை தெரியும்.....

    அழகான ஆழ்ந்த கருத்து.
    வாழ்த்துக்கள் சசிகலா.

    ReplyDelete
  9. சூரிய முத்தத்திற்கு காத்திருக்கும் பனித்துளி! அருமையான உவமை! ரசித்தேன்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  10. வலிய சென்று வாங்கியது
    வலிக்கும் நினைவுகள்.//அப்படியா? நல்ல வரிகள்

    ReplyDelete