Thursday 11 September 2014

ஒரு பார்வை ...!

கேட்கவும் சொல்லவுமான
எண்ணற்ற முனகல்களில்
முடங்கிப்போன மௌனங்கள்...
மொழிபெயர்ப்பின் பரிதவிப்பில்
உறங்கிக்கிடக்கும் காதல்...
கடந்து போகும் நேரமெலாம்
கணக்கெடுத்துக்கொண்டிருக்கிறேன்.
கட்டிவைத்தாவது கொட்டிவிடவேண்டும்
என்றேனும் காதல் சினுங்கள்களை...
அச்சமென்று ஏதுமில்லை
அழிச்சாட்டியத்தின் அலங்காரத்தில்
மழுங்கிப்போன நேசம்
புதுபிக்கும் முயற்சிவேண்டாம்..
அடையாளத்திற்கேனும் அவ்வப்போது
ஒரு பார்வை ...
இல்லையாங்கு கேள்வியாவோம்
தமிழ்க் காதலின் முன்பு...!

38 comments:

  1. ஒரு பார்வை ...! யேயானாலும் மிக நல்ல இனிய தமிழ்ப்பார்வை. பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருக வருக ஐயா. நலம் நலமறிய ஆவல். முதல் வருகை கண்டு மிகவும் மகிழ்ந்தேன். தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிங்க ஐயா.

      Delete
  2. தமிழ்ப்பார்வை சிணுங்காமல் விழிக்கட்டும்..!

    ReplyDelete
    Replies
    1. ஹஹஹ அப்படியேங்க. வருக தோழி நலம் நலமறிய ஆவல்.

      Delete
  3. அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

      Delete
  4. Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

      Delete
  5. ஏக்கங்கள் நிறைந்த வரிகள் ...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

      Delete
  6. தங்களின் தமிழ் பார்வை வரிகள் ரசித்தேன்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

      Delete
  7. பார்வைகள் தரும் இன்பமே வாழ்க.

    ReplyDelete
    Replies
    1. பார்வை ஒன்றே போதுமே.... அப்படியாங்க ?
      வருகைக்கு நன்றிங்க ஐயா. நலம் நலமறிய ஆவல்.

      Delete
  8. வருக மகளே! நலம் நலமறிய ஆவல்.!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா. நலமே. தங்களின் நலன் அறிய ஆவல். தங்களை நேரில் பார்த்தும் மாதங்கள் ஆகிவிட்டன.

      Delete
  9. ஒரு பார்வை .......அதுவும் மெளனப் பார்வை.. மனதில் இருப்பதை உதடால் சொல்லாமல் மெளனப் பார்வையால் அள்ளிக் கொட்டும் பார்வை. அந்த பார்வையோ மனதை தொட்டு செல்கிறது.. உங்கள் கவிதை குறிஞ்சி மலரை போல எப்போதாவதுதான் மலருகிறது அது மணத்தை அள்ளித் தந்து மனதை திருடிஸ் செல்லுகிறது.

    நீண்ட நாட்களுக்கு அப்புறம் அழகான கவிதையை பகிர்ந்த உங்களுக்கு எனது மனம்மார்ந்த பாராட்டுக்கள்.

    தொடர்ந்து எழுதுங்கள் அட்லீஸ்ட் வாரம் ஒரு முறையாவது பகிருங்கள்... வாழ்க வளமுடன்

    ReplyDelete
    Replies
    1. இப்படி உரிமையுடன் கேட்க உறவுகள் இருக்கும் போது எப்படி வாராமல் இருப்பேன். கண்டிப்பாக இனி அடிக்கடி வருகை தர முயற்சிக்கிறேன். மிக்க மகிழ்ச்சியும் நன்றியுங்க.

      Delete
  10. வணக்கம்
    சகோதரி.
    ஒவ்வொரு வரிகளும் மிக அருமையாக உள்ளது பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோ. நலம்தானே ?

      Delete
  11. கட்டிவைத்தாவது கொட்டிவிடவேண்டும்
    என்றேனும் காதல் சினுங்கள்களை...

    அவ்வளவு கோபமா உன்னிடத்தில் அதற்கு......?

    சசிகலா.... உங்களின் இந்த ஒரு பார்வை பல விசயங்களைச் சொல்லிச் செல்கிறது.
    வாழ்த்துக்கள்.

    நலமா தோழி....?

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் பாருங்க எவ்வளவு நாளா எனை இந்த பக்கமே வரவிடாமல் செய்திருக்கிறது என்ன கோபமோ தெரியவில்லை...
      நலமே தோழி. தங்கள் நலன் அறிய ஆவல்.

      Delete
  12. Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

      Delete
  13. ரொம்ப நாள் கழிச்சு பார்க்கிறேன்.... தொடர்ந்து எழுதுங்கள்...

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க நலன் நலன் அறிய ஆவல்.

      Delete
  14. வந்தது கண்டு மகிழ்ச்சி தோழி.

    ஒரு பார்வை ஓராயிரம் செய்தி சொல்லுதே..அருமை தோழி! த.ம. 6

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க தோழி.

      Delete
  15. தமிழ்ப் பார்வை மிகவும் நன்று....
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க .

      Delete
  16. நீண்ட இடைவெளிக்குப் பின்னர் வலைப்பக்கம் மீண்டும் கவிதையுடன் வந்த சகோதரிக்கு நன்றி! டிசம்பருக்குள் தமிழ் மணத்தில் ஒரு சிறப்பான இடம் வந்து விடுவீர்கள்! வாழ்த்துக்கள்!
    த.ம.8

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க .

      Delete
  17. அற்புதம்.மிகவும் ரசித்தேன்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்கஐயா.

      Delete
  18. நல்ல கவிதை...

    சற்றே இடைவெளிக்குப் பிறகு உங்கள் கவிதை படித்ததில் மகிழ்ச்சி.

    முடிந்த போது தொடருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க . கண்டிப்பாக வருகிறேன். இல்லத்தில் அனைவரின் நலனை அறிய ஆவல்.

      Delete
  19. மௌனமும்,பார்வையும் ஒரு மொழிதானே?மொழிகளும் பார்வைகளும் பறிமாறிக்கொள்கிற மொழிகள் இங்கு ஏராளமாய்/

    ReplyDelete
    Replies
    1. வெகு நாட்களுக்கு பிறகு தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete