Friday 20 June 2014

இப்படி ஒரு கேள்வி கேட்டால் உங்கள் பதில் என்ன?

தோழி தேன்மதுரத் தமிழ் கேட்ட கேள்விகளுக்கு என் பதில்கள்.
1.உங்களுடைய 100ஆவது பிறந்தநாளை எப்படிக் கொண்டாட விரும்புகிறீர்கள்?
அது வரை இருக்கமாட்டேன். இருந்தால் அப்போதாவது உறவுகளோடு கொண்டாடுவேன்.

(இது வரை அப்படி ஒரு நாள் வருவதே தொிவதில்லை இதில் இல்லாத போது பிறந்த நாளாம் ?)

2.என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்?
என் தந்தையைப்போல் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க.

3.கடைசியாக சிரித்தது எப்போது? எதற்காக?
எனது இரண்டாவது மகன் செய்த சேட்டைக்காக...

4. 24மணி நேரம் பவர்கட் ஆனால் நீங்கள் செய்வது என்ன?
அதுவும் நன்றாகத்தான் இருக்கிறதே.. என்று மின்சாரம் இல்லாத போது மக்கள் எப்படி இருந்தாா்கள் என்று பிள்ளைகளுக்கு சொல்வேன்.

5. உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் சொல்ல விரும்புவது என்ன?
எப்போதும் ஒருவா்க்கு ஒருவா் விட்டுக்கொடுத்து அன்பாய் வாழ்வதே வாழ்வென்பதை சொல்வேன்.

6.உலகத்தில் உள்ள பிரச்சனையில் உங்களால் தீர்க்கமுடியும் என்றால் எந்த பிரச்சனையை தீர்க்க விரும்புகிறீர்கள்?
வறுமை என்பதை ஒழிக்க வேண்டும் அது தானே ஒழியாது ஆதலால் அவரவா் தேவையை அவரவரே தேட வேண்டும் என்பதை வலியுறுத்துவேன்.

7.நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்?
கணவரிடம் பிறகு அக்காவிடம்.

8.உங்களை பற்றிய தவறான தகவல் பரப்பினால் என்ன செய்வீர்கள்?
அதுவும் கடந்து போகும்..


9.உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள்?
பட்டினத்தாா் பாடல் சொல்வேன்.

10.உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்?
சாண்டில்யன் நாவல் படிப்பது , பாடல் கேட்பது.

29 comments:

  1. ஆஹா ...அசத்தீட்டீங்க தோழி :)) வாழ்த்துக்கள் .

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க தோழி.

      Delete
  2. அசத்தல் பதில்கள்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க .

      Delete
  3. வணக்கம்

    கேள்வியும் நன்று பதிலும் நன்று ...பகிர்வுக்கு நன்றி.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க .

      Delete
  4. அருமை பதில்கள் தோழி...நன்றி

    ReplyDelete
    Replies
    1. மாட்ட விட்டதோட இல்லாம இதுல என்ன அருமையாம் அருமை...

      Delete
    2. ஹாஹா ...இப்படி அருமையான பதிவு வரதுக்கு தானே மாட்டிவிட்டது?

      Delete
  5. Replies
    1. அய் அக்கா எப்படி இருக்கிங்க... இல்லத்தில் அனைவரும் நலமா ?

      Delete
  6. பதில்கள் ”பளிச்” ”பளிச்”... :)

    வாழ்த்துக்கள் தோழி!

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சிங்க தோழி.

      Delete
  7. வாழ்த்துக்கள் சகோதரி...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க .

      Delete

  8. //சாண்டில்யன் நாவல் படிப்பது , பாடல் கேட்பது.///
    சாண்டில்யன் கதைகள் = ரொமாண்டிக் கதைகள்... பரவாயில்ளையே இந்த தள்ளாத வயதிலும் காதல் ரசம் சொட்டும் கதைகளை படிக்கிறீர்களே

    ReplyDelete
    Replies
    1. இதெல்லாம் ஓவா் உங்கள் வயதை வைத்தே அனைவரின் வயதும் அதே என்று நினைத்துவிடக்கூடாது.

      Delete
  9. பெண் பதிவர்களிடம் கேட்கும் போது இந்த கேள்விகள் இப்படி வந்து இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.

    3//.கடைசியாக சிரித்தது எப்போது? எதற்காக?//
    கடைசியாக உங்கள் கணவர் சிரித்தது எப்போது?


    // 24மணி நேரம் பவர்கட் ஆனால் நீங்கள் செய்வது என்ன?//
    உங்கள் கணவிரின் பவரை எப்போது எப்படி கட் செய்தீர்கள்?

    ReplyDelete
    Replies
    1. இருங்க இருங்க உங்க வீட்டம்மாவை எழுத சொல்லிட்டு நாங்களும் எழுதுகிறோம்.

      Delete
  10. சுவாரஸ்யம்தான். சாண்டில்யன் தவிர வேறு யார் கதையும் படிக்க மாட்டீர்களா!

    ReplyDelete
    Replies
    1. ஆா்வமுடன் படிக்க பிடித்தது சாண்டில்யன் நாவல்கள் மட்டுமே. திரும்ப திரும்ப படிப்பேன்.

      Delete
  11. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க .

    ReplyDelete
  12. நானும் எழுத வேண்டும் கிரேஸ் இணைத்துள்ளார்.
    இரத்தினச் சுரக்கமாக பதில்கள் உள்ளது.
    வேதா. இலங்காதிலகம்.
    வாங்கோ என் வலைப்பக்கமும்.

    ReplyDelete
    Replies
    1. அமுதம் பருக அழைப்பு வேறா கண்டிப்பாக வருகிறேன் தோழி. மிக்க நன்றி.

      Delete
  13. நறுக் சுருக் பதில்கள் சுவாரஸ்யம்..... பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

      Delete
  14. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

    ReplyDelete
  15. முத்துக்கு முத்தாக
    பத்துக்குப்க பத்தாக
    கேள்வி - பதில்
    நன்றாக இருக்கிறதே!

    ReplyDelete
  16. ஒற்றை வரியில் இரத்தினச் சுருக்கமாக அதே சமயம் சிறப்பான, சிரத்தையான பதில்கள் அளித்து அசத்திவிட்டீர்கள். பாராட்டுகள் சசி.

    ReplyDelete