Thursday 23 January 2014

சின்ன சின்ன ஆசை !


அவரைக்காய் கொடி படர
அழகாக பந்தலிட்டு
அதன் கீழே நீ அமர
அருகமர்ந்து நா பேச
ஆச வச்சேன் அருமை மச்சான் .

ஒத்தையடிப் பாதையில
எனை தொடர்ந்து நீ வரவும்
நடையும் தான் நாட்டியமாக
நாளுந்தான் ஆச வச்சேன் .

ஆள் உயர கண்ணாடி
அதன் பின்னே நான் ஒளிய
கரம் பிடித்து  நீ இழுக்க
கண் மூடி ஆச வச்சேன் .

அடுக்கடுக்கா ஆச வர
அம்மிக்கல்லா காத்திருக்கேன்
அன்பு  இருந்தா வாயேன் மச்சான்
அல்லிப் பூவா பூத்திடுவேன் .

48 comments:

  1. வாவ் மிக அருமை இப்படி கவிதை பாடிதான் உங்கள் ஆசைக் கணவரை கவர்ந்து இழுத்திர்களோ?

    ReplyDelete
    Replies
    1. உற்சாகப்படுத்தும் தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . நன்றிங்க. நான் பாடுவேன் ஆனா அவர் கேட்க பாட மாட்டேன் .

      Delete
  2. படிக்க ரசிக்க மகிழ உங்களின் கவிதை புரியும்படியாகவும் மிக எளிமையாகவும் இருக்கிறது சபாஷ் என்று பாராட்டாமல் இருக்க முடியவில்லை

    ReplyDelete
    Replies
    1. தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிங்க .

      Delete
  3. ரசிக்க வைக்கும் ஆசை...

    வாசிக்க வாசிக்க இனிமை...

    வாழ்த்துக்கள் சகோதரி...

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க சகோ .

      Delete
  4. வணக்கம்
    என்ன கவிதை மனதை தித்திக்குது....அருமை வாழ்த்துக்கள்..

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க சகோ .

      Delete
  5. அருமையான கவிதை.மிகவும் இரசித்தேன் தோழி. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

      Delete
  6. எனக்கு உன் அண்ணனோடு ரயில் தண்டவாளத்துல கைக்கோர்த்து நடக்க....,

    கருமை நிற மலைப்பாம்பாய் நீண்டிருக்கும் சாலையில் இரு சக்கர வாகனத்தில் செல்ல ஆசை....,

    குளிக்க வைத்து குளிக்க ஆசை

    கற்சிலையாய் அமர வைத்து தலை துவட்ட ஆசை

    தமிழ்பாடி தயங்காம காதல் செய்ய ஆசை நாத்தனாரே!

    ReplyDelete
  7. நல்ல நல்ல ஆசைகள் தான் அண்ணி .

    ReplyDelete
  8. அழகான ஆசைகள்... அழகான கவிதையாக எங்களுக்கு கிடைத்துள்ளது.. பாராட்டுகள்...

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

      Delete
  9. Replies
    1. தங்களின் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க ஐயா.

      Delete
  10. கவிதையும் அழகு படத்திலுள்ளவரும் அழகு. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

      Delete
  11. ஆள் உயர கண்ணாடி
    அதன் பின்னே நான் ஒளிய..
    அம்புட்டு உசரமா நீங்க..!!
    வரிகள் அனைத்தும் யதார்த்தம்.. சூப்பர் சசி..

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகை கண்டு மகிழ்ந்தேன். சரியான உயரம் தான் இருப்பேனுங்க. நன்றிங்க.

      Delete
  12. //அல்லிப் பூவா பூத்திடுவேன்.//
    தாமரைப்பூவா என சொல்லாமல் அல்லிப் பூவா என சொன்னது அருமையான கற்பனை. அல்லிப்பூ இரவில் சந்திரனைக் கண்டதும் தானே மலர்க்கிறது! கவிதை அருமை வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. ரசித்து கருத்திட்டமை கண்டு மகிழ்ந்தேன். மிக்க நன்றிங்க.

      Delete
  13. அழகான வரிகள் தோழி... சொக்க வைக்கும் ஆசைகள்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ.

      Delete
  14. அழகான வரிகள் தோழி... சொக்க வைக்கும் ஆசைகள்...

    ReplyDelete
  15. துள்ளுது கவிதை. நன்று.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகை கண்டு மகிழ்ந்தேன். மிக்க நன்றிங்க.

      Delete
  16. ஒரு பாமரப்பெண்ணின் ஏக்கத்தைப் பாவாக்கிய அழகுக்குப் பாராட்டுகள் தென்றல். வரிக்கு வரி காதலின் ரசனை.

    ReplyDelete
    Replies
    1. ரசித்து கருத்திட்டமை கண்டு மகிழ்ந்தேன் தோழி. மிக்க நன்றி.

      Delete
  17. அருமை.... பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  18. கவிதை மிக அருமை.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  19. பூ பூவா பூத்திருக்கே!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  20. அருமையான ரசிக்க வைக்கும் வரிகள்! சிறப்பான கவிதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

      Delete
  21. கிராமத்து சமையல் விருந்துக்கு பறவை முனியம்மா
    பதிவர் கவிதை விருந்துக்கு சசியம்மா..

    ReplyDelete
    Replies
    1. ஹஹ சரிங்க அய்யா.

      Delete

  22. வணக்கம்!

    நாட்டுப் புறச்சொல்லால் பாட்டுப் பலபடிச்ச!
    கூட்டுக் சுவையைக் கொடுத்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க ஐயா.

      Delete
  23. நோட்டுக்குள் சேர்ந்தே நொடிகின்ற காதலுக்குள்
    நாட்டுப் புறக்காதல் நன்றாகும் - வீட்டோரம்
    நட்டுவைக்கும் நல்மரத்தின் தேன்கனியாய் வாழ்வில்
    வடுவற்று (த்) தேறும் வலிந்து !

    கிராமத்து வாசனை நன்றாக மணக்கிறது கவிதையில்
    அருமை சசிகலா
    இனிய வாழ்த்து
    வாழ்க வளமுடன்
    TM 6

    ReplyDelete
    Replies
    1. அருமை அருமை நன்றிங்க.

      Delete
  24. அல்லிப் பூவா பூத்திட்ட
    அருமையான கவிதை வரிகள்..!

    ReplyDelete
  25. பாடலாகவே படிக்கமுடிந்தது.

    அருமையான கவிதை

    ReplyDelete