Tuesday 28 January 2014

பிள்ளையோடு பிள்ளையாய் !


குடம் குடமா நீர் ஊற்றி-வேர்
குளிர நனைய விட்டு
வளர்ந்து வந்த தென்னம்பிள்ள
வாரிசென வளர்ந்த பிள்ள.
கிளை அசைய கீற்றசைய
கீதம் கேட்கும் நெஞ்சினிலே
வருடி விடும் தென்றலாய்
வாரி இறைக்கும் பூவை பன்னீராய்..
தொண்டை நனைக்கும் இளநீராய்.
நிழலாய் காத்து நிற்கும்
நீண்ட நெடிய கதைகள் சொல்லும்
வானை முட்டும் ஆசையுடன்
வளர்ந்து விட ஆசைகொள்ளும்.
கீற்றாய் நாராய் காயாய்
அனைத்தும் கொடுத்து
பயன் தரும்...ஆசையுடனே
நம்மோடு இணைந்து வரும்..
ஆதலால் உறவுகளே
அனைவரும் பிள்ளையோடு
பிள்ளையாய் வளர்ப்போம்
தென்னம்பிள்ளையை !

40 comments:

  1. பல வீடுகள்ல வளர்ககிற பிள்ளைய விட ªத்ன்னம் பிள்ளைகளே தேவலைன்னு சொல்ற மாதிரிதான் நிலைமை இருக்குது. சில விதிவிலக்குகளும் உண்டு. தென்னையின் பெருமையைப் பேசிய கவிதை வரிகள் அபாரம் தென்றல்!

    ReplyDelete
    Replies
    1. பெருமையை பேசத்தான் முடிகிறது. அருமையாய் வளர்க்க முடியவில்லை.

      Delete
  2. இப்ப இருக்கும் வீடுகளில் தென்னம் பிள்ளையை வளர்க்க முடியதே சசி! ஏன்னா அதோட வேர் கட்டிடங்களை பிளந்து செல்லக்கூடியது.

    ReplyDelete
    Replies
    1. கிராமத்தில் ஒரு வீடு கட்டுங்க.

      Delete
  3. ராஜி சொல்றது ரொம்ப சரி. ஒரு கிரவுன்ட் இருந்தாலே தென்னை வைப்பது சிரமம். இப்போதெல்லாம் அரை, முக்கால்னு வாங்கற எடத்துல இந்த மாதிரி நீண்ட வேர்களை விடும் மரங்களை எங்கே வளர்ப்பது? கிராமப் புறங்களில் மட்டுமே இது சாத்தியமாகும். இருப்பினும் கவிதை அழகு.

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான். இப்படியே எல்லாம் நினைத்தால் ?

      Delete
  4. தென்னையப் பெத்தா இளநீரு
    பிள்ளையப் பெத்தா கண்ணீரு எனும்
    கவிஞரின் பாடலை நினைவுறுத்திப் போகும்
    கவிதை அருமையிலும் அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க ஐயா.

      Delete
  5. தென்னையை பற்றிய கவிதையின் வரிகள் நன்று இறுதியில் சொல்லிய வரிகள்
    சிறப்பு வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க சகோ.

      Delete
  6. ''..பிள்ளையோடு
    பிள்ளையாய் வளர்ப்போம்
    தென்னம்பிள்ளையை !
    good
    Vetha.Elangathilakam

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க .

      Delete
  7. "தென்னைய பெத்தா இளநீரு, பிள்ளையைப் பெத்தா hண்ணீரு'' பாடல் வரிகள்தான் நினைவுக்கு வந்தன. ஆனாலும் வீடு கட்ட இடைஞல் என்று மூன்று தென்னை மரங்களை வெட்டியது இன்னும் உறுத்தலாகவே இருக்கிறது!

    ReplyDelete
    Replies
    1. 3 மரங்களா ? அடடா கேட்பதற்கே கஷ்டமாக இருக்கிறதுங்க... தங்களுக்கு எப்படி இருக்கும்.?

      Delete
  8. தானுண்ட நீரைத் தலையாலே தான் தருமே!

    ReplyDelete
    Replies
    1. ஐயா தங்களின் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க ஐயா.

      Delete
  9. பிள்ளையோடு பிள்ளையாய்
    தென்னம்பிள்ளை செழுமையான கவிதை..!

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. தங்களின் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

      Delete
  10. கவிதைல அரசியல் ஒண்ணும் இல்லையே....! :)))

    ReplyDelete
    Replies
    1. தாய் வீட்டில் 2 தென்னை மரம் வளர்த்து அதன் பயனை அனுபவித்த அனுபவத்தில் மட்டுமே எழுதியது வேறெந்த அரசியலும் இல்லை.

      Delete
  11. ரமணி ஐயா சொன்னது தான் ஞாபகம் வந்தது சகோதரி...

    மனம் கவர்ந்த வரிகள்...

    வாழ்த்துக்கள் சகோதரி...

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி நன்றி சகோ.

      Delete
  12. ஒவ்வொரு வரியும் அருமை சசிகலா...வாழ்த்துகள்!

    ReplyDelete
  13. Replies
    1. தங்களின் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

      Delete
  14. அடியாத்தே இருக்கிற பிள்ளையை வளர்க்கிறதுக்குள்ள கண்ணுமுழி பிதுங்குதே இதுல வேற தென்னம்பிள்ளையை வளர்க்கிறதா?? நீங்க வளருங்க எங்களுக்கும் சேர்த்து...அதை நேரம் கிடைக்கும் போது நாங்க வந்து பார்க்கிறோம் tha.ma 8

    ReplyDelete
    Replies
    1. இந்த பிள்ளையை வளர்த்தா ஆரோக்கியம் தாங்க..

      Delete
  15. Replies
    1. மிக்க மகிழ்ச்சி நன்றிங்க.

      Delete
  16. சிறப்பான வரிகள்...

    மனசு இருக்கு... இடம் தான் இல்லை...:)

    ReplyDelete
  17. நீரூற்றி வளர்த்தால் இளநீறு தரும் தென்னம்பிள்ளை! அருமையான படைப்பு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  18. தென்னை மரம் இருந்த இடத்தில கார் பார்க்கிங் ஆகிப்போச்சு... என்னத்த சொல்ல?

    ReplyDelete
  19. அருமையான கவிதை

    தென்னையைப் பெத்தா.... இளநீரு...நினைவில் வந்தது

    ReplyDelete
  20. அன்பு சகோதரிக்கு வணக்கம். நலம் தானே!
    மரம் வளர்க்கும் அற்புதமான பழக்கத்தைத் தங்கள் கவிவரிகளில் கருவாக தந்த விதம் வெகுவாக கவர்கிறது. அழகான வரிகள் மிகவும் ரசித்தேன். நன்றி..

    ReplyDelete