Friday 27 December 2013

வருஷமுந்தான் ஓடிப்போச்சி !


ஊர் கூடும் சந்தையில
ஒரு பார்வ பார்த்திடவே
ஒருத்தியிங்கே காத்திருக்கேன்
ஒரு முகமா பார்த்தாலென்ன ?

தினுசாத்தான் பார்வ பார்த்து
திசைக்கொரு ஜாட காட்டி
திரும்பாம போறவரே..
திரும்பி நீயும் பார்த்தாலென்ன ?
தித்திப்பா சிரிச்சாலென்ன ?

கனங்காம்பரம் பூச்சூட்டி
காலையில காத்திருக்கேன்
மல்லிகைப்பூ சரம் தொடுத்து
மாலை வர காத்திருந்தேன்
மனம் போற திசை நீயும்
வாராம போவதென்ன ?

வாடிக்கையா கண்ணாமூச்சி
ஆட்டமாடும் பழக்கமென்ன ?
வருஷமுந்தான் ஓடிப்போச்சி
வக்கனையா பேச்சுமில்ல
வெசரசாத்தான் வாருமைய்யா
வரிசையோட காத்திருக்கேன்.

80 comments:

  1. 2013 வெரசாத்தான் ஓடி போச்சு.. காத்திருக்கும் கன்னிகைக்கு 2014 ல் காளை அவன் சீக்கிரமே வரட்டும். நல்லாஇருக்கு கவிதை..:)

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

      Delete
  2. நம்பிக்கை அடுத்த வருடம் நிறைவேறட்டும்...

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க சகோ.

      Delete
  3. Replies
    1. மிக்க நன்றிங்க ஐயா.

      Delete
  4. அடுத்த வருசமாவது உன் ஆசை நிறைவேறட்டும் சசி!

    ReplyDelete
    Replies
    1. அது கற்பனை கவிதை அக்கா.

      Delete
  5. நீண்ட இடைவெளி
    வருத்தம் தந்த போதும்
    அற்புதமான கவிதை
    மகிழ்வளிக்கிறது
    இனியேனும் தொடர்ந்து கவிதைகள் தரவேண்டி
    நாங்களும் காத்திருக்கிறோம்...
    வாழ்த்துக்களுடன்

    ReplyDelete
    Replies
    1. ஐயா தங்கள் நலன் அறிய ஆவல். தொடர்ந்து வருகை தர முயற்சி செய்கிறேன் ஐயா.

      Delete
  6. Replies
    1. மிக்க நன்றிங்க ஐயா.

      Delete
  7. கண்டிப்பா திரும்பிப் பார்த்து சிரிப்பார்... த.ம.5

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  8. கவிதை நன்று.
    நீண்ட நாட்கலகிவிட்டதே வலைப பக்கம் வந்து.

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க கணினி கோளாறு இன்னமும் சரியாக வில்லை.

      Delete
  9. வாங்க தோழி! நலமா?

    நாட்களும் தான் ஓடிப் போச்சு!
    வாரம் மாசம் ஆகிப்போச்சு!
    காணுமிடம் தேடலாச்சு!
    வாட்டினதேன் நம்மனசை தொவச்சு..:)

    அருமையான கவிதையோடு மீள் வருகை கண்டு மகிழ்ச்சி!
    வாழ்த்துக்கள் தோழி!

    ReplyDelete
    Replies
    1. தங்களை எல்லாம் சந்தித்ததில் எனக்கும் மிக்க மகிழ்ச்சி தோழி.

      Delete
  10. நல்ல கவிநயம் .வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  11. அழகு சசி ! வாழ்த்துக்கள் !

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  12. //வருஷமுந்தான் ஓடிப்போச்சி//

    ஆமாம். 2013 போயே போச்சு ! ;)))))

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க ஐயா.

      Delete
  13. அழகுக் கவிதை அக்கா...
    வருசமும்தான் ஓடிப்போச்சு... பொருத்தமாத்தான் வந்திருக்கு...
    அருமை அக்கா...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க சகோ.

      Delete
  14. அருமையான வரிகள்...பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  15. வரிசையோட காத்திருக்கேன்.//

    இனிய புத்தாண்டு வாழ்த்துகள்..!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  16. அருமையான கவிதை சசி மெட்டு போட்டு திரைப்பாடலாக்கலாம்...ஏன் ரொம்ப நாளாச்சி எழுதி....

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க தோழி.

      Delete
    2. வீட்டில் கணினி கோளாறு அலுவலகத்தில் நேரமின்மை.

      Delete
  17. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_28.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிங்க சகோ. சென்று வந்தேன்.

      Delete
  18. நீண்ட நாட்களுக்கு பிறகு மலர்ந்த கவிதை மணம் வீசி மனதை தொட்டுச் செல்கின்றது. பாராட்டுக்கள்

    ReplyDelete
    Replies
    1. நீண்ட நாட்களுக்கு பிறகு தங்கள் பின்னூட்டமும் கண்டு மிகவும் மகிழ்ந்தேனுங்க.

      Delete
  19. கவிதைக்கேற்ற படம். செலக்ஷன் அருமை

    ReplyDelete
  20. மேற்கில் மறைந்த சூரியன் நிச்சயம் மீண்டும் கிழக்கில் உதிப்பான் உங்கள் மனதிற்கு பிரகாசத்தை கொடுப்பான் கண்டிப்பாக அதுவரை நீங்கள் பொறுத்து இருக்கதான் வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. இது கற்பனைக் கவிதைங்க.

      Delete
  21. எங்க வீட்டு அம்மா நான் வேலையில் இருந்து வர லேட்டான இப்படிதான் வரிசை செய்ய காத்து இருக்கேண்னு சொல்லி காத்திருப்பாங்க நான் வீட்டுக்கு சென்றது வரிசை செய்யுறேன் என்று சொல்லி வரிசையாக பூரிக்கட்டையால் வரிசை செய்யுவாங்க. நீங்களும் அப்படிதானோ?

    ReplyDelete
    Replies
    1. அப்படியா செய்வாங்க அவங்களிடம் டியூசன் படிக்க மகளிர் எல்லோரும் வருவதாக சொல்லுங்க.

      Delete
  22. Replies
    1. காலம் தான் காரணம். வேறென்ன சொல்ல ?

      Delete
  23. அருமையான கவிதை......

    பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க

      Delete
  24. வாடிக்கையா கண்ணாமூச்சி
    ஆட்டமாடும் பழக்கமென்ன ?
    வருஷமுந்தான் ஓடிப்போச்சி
    வக்கனையா பேச்சுமில்ல
    வெசரசாத்தான் வாருமைய்யா
    வரிசையோட காத்திருக்கேன்.

    காரிகையின் கண் குளிர வரவிருக்கும்
    கனிவான புத்தாண்டில் இன்பம் சூழ
    தோழி எந்தன் தோழி உனக்கும் வாழ்த்துச் சொல்லித்
    தொடர்கின்றேன் நிழல்ல நீ எனக்கு நிஜமே என்று ....

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி தோழி நலம் தானே ? இல்லத்தில் அனைவரின் நலனை அறிய ஆவல். அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள் தோழி.

      Delete
  25. Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க தோழி.

      Delete
  26. அவ காத்திருக்க காத்திருக்க வருஷந்தான் ஓடிப் போச்சு காலமெல்லாம் காத்திருக்கும் கன்னி அவ நாம அதை தீயா பாக்கோணும் தீயே தீயே பெண் தீயே தீய்க்கே இரை ஆனாய் அன்னிக்கு இலங்கை யிலே அப்பறம் தீ வச்ச மதுரையிலே இன்னும் இங்கு ஸ்டாவா வெடிக்குதுங்க கன்னிகள் காத்திருக்க

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க .

      Delete
  27. அன்பு சகோதாரிக்கு வணக்கம்
    கிராமத்து மண் வாசனை கமழும் அழகான கவிதை. தலைவியின் ஏக்கத்தை மிக அழகாக காட்சியாய் கவிதையில் கொண்டு வந்து விட்டீர்கள் வாழ்த்துகள்.
    கவிதையில் சந்த நயமும் அமைந்திருப்பது சிறப்பு. மெட்டு போட்டு பாடு விடும் படி உள்ளது வரிகள். பகிர்வுக்கு நன்றிகள் சகோதரி..

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி சகோ. புத்தாண்டு வாழ்த்துகள்.

      Delete
  28. கவிதை கற்பனை நடை இரண்டும் நயம்.
    புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சிங்க . தங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

      Delete
  29. வழக்கம் போலவே அருமை. எத்தனை வருசம் போனாலும் அன்பும் பாசமும் அப்படியேத்தான இருக்கு? ஆண்-பெண் உறவுகளில் கடந்து செல்லும் வருசங்கதான் பிணைப்புகளை இன்னும் நெருக்கமாக்குகிறது. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சிங்க தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். தங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

      Delete
  30. நன்றி சகோதரி ! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது உளங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மிகக மகிழ்ச்சிங்க தங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

      Delete
  31. இனிய புத்தாண்டு வாழ்த்துகள் சசி!
    வரும் ஆண்டு உங்களது இன்னொரு கவிதைத் தொகுதி வெளி வரட்டும்.
    அன்புடன்,
    ரஞ்சனி

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சிங்க அம்மா. தங்கள் ஆசியுடன் எல்லாம் நல்லதாகவே நடக்கும். நன்றிங்க அம்மா.

      Delete
  32. தங்களுக்கும், குடும்பத்தாருக்கும் எனது இதயங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சிங்க. தங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

      Delete

  33. வணக்கம்!

    புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பல்லாண்டு வாழ்க! படா்கின்ற புத்தாண்டை
    நல்லாண்டு வாழ்க நலஞ்சூடி! - வல்லதமிழ்ச்
    சொல்லாண்டு வாழ்க! சொந்தமென நம்மினத்தின்
    தொல்லாண்டு வாழ்க சுடா்ந்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    01.01.2014

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சிங்க ஐயா. தங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

      Delete
  34. உங்களுக்கும், உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள். வாழ்க வளமுடன்

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சிங்க தங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

      Delete
  35. கவிதை அருமை
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  36. எங்க ரொம்ப நாளா தலைமறைவா இருந்தீங்க? புத்தாண்டு வாழ்த்துகள்!

    ReplyDelete
  37. நீண்ட நாட்களுக்கு பிறகு நல்லதொரு கவிதை வாழ்த்துக்கள் தொடருங்கள்

    ReplyDelete
  38. அன்பை அழகாய் சொன்னீர்
    இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  39. அன்பு சகோதரிக்கு வணக்கம்
    தங்களுக்கும் இல்லத்தார் அனைவருக்கும் இனிய பொங்கல் மற்றும் தமிழர் திருநாள் வாழ்த்துகள்.

    ReplyDelete

  40. வணக்கம்!

    இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பொங்கல் திருநாள் பொழியட்டும் நல்வளங்கள்!
    தங்கத் தமிழ்போல் தழைத்து!

    பொங்கல் திருநாள் புகுத்தட்டும் பன்னலங்கள்
    திங்கள் ஒளிபோல் திகழ்ந்து!

    பொங்கல் திருநாள் பொலியட்டும் பொன்னழகாய்
    உங்கள் இதயம் ஒளிர்ந்து!

    பொங்கல் திருநாள் புகழட்டும் பூந்தமிழை
    எங்கும் இனிமை இசைத்து!

    பொங்கல் திருநாள் புனையட்டும் புத்துலகைச்
    சங்கத் தமிழைச் சமைத்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  41. தாளம் போட வைக்கும் வரிகள். அருமை அருமை!

    ReplyDelete
  42. புது வருஷம் பிறந்து 20 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது இது வரை தூங்கியது போதும் எழுந்திருந்து பதிவுகள் போடவும்

    ReplyDelete
  43. கிராமிய வாசனை தூக்கல் அழகிய கவிதை தொடர வாழ்த்துக்கள்...!

    ReplyDelete