Tuesday 19 November 2013

துளித் துளியாய் !

சப்தங்களை 
தட்டி எழுப்பும்
அதிகாலைப்பறவைகள்.

கூரை மேயும்
காலம் நெருங்கிவிட்டது
ஆடிக்காற்று.

ஏட்டுச் சுரைக்காய்
நடைமுறைக்கு உதவாதாம்
நீதியும்.. நேர்மையும்.

சொத்துக்கு சொந்தக்காரன்
உடல் திண்ணும்
மண்.

சுழற்சியில்
சூரிய சந்திரன்
என்றும் நிலையாக
ஏழையின் வறுமை.

28 comments:

  1. ஏழைகள் இன்னும் ஏழைகள் ஆகிறார்கள், பணக்காரர்கள் இன்னும் பணக்காரர்கள் ஆகிறார்கள்...

    ReplyDelete
  2. அரைக்கிலோ நேர்மை கொண்டு கால் கிலோ வெங்காயம் கூட வாங்க முடியாது இப்போ!!

    ReplyDelete
  3. குறுங்கவிதைகள் ரசிக்க வைக்கின்றன. எனக்கு ஒரு சந்தேகம் விரக்தியின் வெளிப்பாடோ அழகிய கவிதைகள்?

    ReplyDelete
  4. வறுமை என்பது கண்டிப்பாக நிலையற்றது முயன்றால் நாம் அதை மாற்றலாம்

    ReplyDelete
  5. குறுங்கவிகளால் உணர்த்திய
    நிகழ்வுகள் அருமை!
    உணர்வுகள் உறுத்தல்!

    வாழ்த்துக்கள் தோழி!

    த ம.2

    ReplyDelete
  6. இந்திய பணமெல்லாம் அயல் நாட்டு சுவீட்ஸ் வக்கியில் இன்று இந்தியா நிலையான ஏழ்மையில்

    ReplyDelete
  7. //என்றும் நிலையாக ஏழையின் வறுமை.//

    துளித்துளியாய்ச் சொல்லியுள்ள உண்மைகள் மனதை நெருடுகிறது.

    அருமையான ஆக்கம். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  8. உணர்வு மிகுந்த கவிதை வாழ்த்துக்கள் தோழி .

    ReplyDelete
  9. குறுங்கவிதைகள் அனைத்தும் அருமை! முதல் கவிதை மிகவும் ரசித்தேன்! நன்றி!

    ReplyDelete
  10. GMB சார் விரக்தியோ இல்லையோ இப்படியான கவிதைகள் படிக்கும். வாய்ப்பு கிடைக்கிறதே!

    ReplyDelete
  11. வணக்கம்
    சகோதரி

    கவிதையின் வரிகள்...... ஆழமாக மனதில் ஊன்றியது.. அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  12. சுழற்சியில்
    சூரிய சந்திரன்
    என்றும் நிலையாக
    ஏழையின் வறுமை.
    துளித்துளியாக நிலை மாறட்டும்..!

    ReplyDelete
  13. வருத்தங்கள் தான்..நீதி நேர்மை என்றால் அழிக்கத் தான் பார்க்கிறார்கள்...ஆனாலும் "தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தருமம் மறுபடியும் வெல்லும்" என்று நம்பிக்கை வைக்க வேண்டியதுதான் தோழி...அதைத் தவிர வேறு என்ன வழி???

    ReplyDelete
  14. ''..சுழற்சியில்

    சூரிய சந்திரன்

    என்றும் நிலையாக

    ஏழையின் வறுமை...'' உண்மையே
    Vetha.Elangathilakam.

    ReplyDelete
  15. ஏழையின் வறுமை சூரிய சந்திரனின் சுழற்சி போல் மாறாததாக இருக்கிறது....

    ReplyDelete
  16. முயற்சி செய்தால் மட்டும் ஒரேநாளில் முன்னேறிவிட முடியாது...ஏழைகள் இறுதிவரை போராடத்தான் வேண்டியுள்ளது...

    ReplyDelete
  17. நிதர்சனமான உண்மைகள் .....

    ReplyDelete
  18. துளித்துளியாய் உண்மைகள்....
    அருமை.
    த,ம 7

    ReplyDelete
  19. என்றும் நிலையாக, ஏழையின் வறுமை மட்டுமலல.. உன்போலும் வறுமை எதிர்ப்புக் கவிகளின் குரலும்தான் தங்கையே! “இன்னாது அம்ம இவ்வுலகம், இனிய காண்க இதன் இயல்புணர்ந்தோரே!” என்ற சங்கப் புலவன் முதல் சசிகலா வரை இந்தப் பட்டியலும் தொடர்கிறது. எல்லாம் மாறும் என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை - “தானா எல்லாம் மாறும் என்பது பழைய பொய்” என்பதும்தானே? சுருக்-நறுக் கவிதை நன்றும்மா.

    ReplyDelete
  20. துளியெனத் வந்தாலும் களிமிகத் தந்ததே!

    ReplyDelete
  21. அருமையான ஹைக்கூக்களின் மாலை!

    ReplyDelete
  22. அன்பு சகோதரிக்கு வணக்கம்,
    குறுங்கவிதைகள் ஒவ்வொன்றும் குட்டிக்கருத்து தந்து சிந்தனையைச் சீண்டி விடுகிறது. அனைத்தும் அருமை. தங்கள் சமூக சிந்தனைக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். பகிர்வுக்கு நன்றிகள்..

    ReplyDelete
  23. ஏழ்மையின் நிலை.... நல்ல கவிதைப் பகிர்வு சசிகலா. பாராட்டுகள்.

    ReplyDelete
  24. யதார்த்தங்களை யவ்வனமாக தந்தீர்கள்
    ரசித்தேன்....! பகிர்வுக்கு நன்றி வாழ்த்துக்கள்.....!

    ReplyDelete
  25. ஏழ்மையின் நிலையை எடுத்துரைத்த விதம் அருமை! பகிர்விற்கு நன்றி!

    ReplyDelete