Friday 15 November 2013

சர்க்கரையில் ஏதினிப்பு ?


அம்மிக்கல்லு ஆட்டுக்கல்லு
அழகா இருக்கும் மாம பல்லு

சீமதொர கணக்காட்டம்
சீவி நிக்கும் சிகையழகு

கொல்லப்புறம் நான் போக
கொண்டு வரும் அவன் மூக்கழக 
கொடமொளகா.

முசுமுசுக்க இலை உரச
கை தேடும் மீசையத்தான்.

அய்யனாரு சிலையாட்டம்
அச்சமறியா அவன் முகமும்.

காக்கிச்சட்ட மிடுக்காட்டம்
கஞ்சி போட்ட வேட்டிசட்டை.

கட்டி வைச்ச பூங்கொத்தா
கன்னமினிக்கும் அவன் பேச்சு.

சர்க்கரையில் ஏதினிப்பு ?
சங்கு கழுத்து மாமன் 
நிறமோ மாசிவப்பு.

பஞ்சாயத்து மேடையிலே
பார்வையெலாம் அவன் மேல.

கண்ணுபடபோகுமுன்னு
காவ காக்கும் என் இமையும்.

26 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. வணக்கம்
    சகோதரி
    அழகான கவிதை அழகாக எழுதியுள்ளிர்கள்

    கட்டி வைச்ச பூங்கொத்தா
    கன்னமினிக்கும் அவன் பேச்சு.

    அருமையான வரிகள் படமும் அழகு வாழ்த்துக்கள்
    தமிழ்மணத்தில் வாக்கு போட்டாச்சி..

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. நாக்கு கேட்க்கும் இனிப்பை விட மனசு கேட்க்கும் இனிப்பு தான் உன்மயிலேயே இனிக்கும் .சரிதானே ?

    ReplyDelete
  4. வணக்கம் சகோதரி,,
    சக்கரையில் ஏதிணிப்பு! தங்கள் கவியே கிராமத்து மண்வாசனையோடு படிப்பவர்களின் மனதை இனிக்கச் செய்கிறது. கவிதை வரிகள் அனைத்தும் அருமை சகோதரி. பகிர்வுக்கு நன்றி. தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. இனிக்க வைக்கிறது வரிகள்... வாழ்த்துக்கள் சகோதரி...

    ReplyDelete
  6. நல்ல கிராமிய பாடலுக்கான வரிகள் இனிக்க வைக்கின்றன வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. சொல்லில் மணக்கும் மண்வாசனை!

    ReplyDelete
  8. மண்வாசம் மிக்க வரிகள்! அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  9. ரசிக்கும்படியான வரிகள்...

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. அற்புதமான வர்ணனை
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. சர்க்கரையில் ஏதினிப்பு வரிகளெல்லாம் தேனினிப்பு

    ReplyDelete
  12. கண்ணுபடபோகுமுன்னு
    காவ காக்கும் என் இமையும்.

    இனிக்கும் கவிதை..!

    ReplyDelete
  13. வரிகள்! வர்ணனைகள் !அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  14. கிராமிய மணத்துடன் அந்தப் பேச்சு வழக்கிலும்
    இனிக்கும் கவிவரிகள்!

    ரசித்தேன். வாழ்த்துக்கள்!

    த ம.6

    ReplyDelete

  15. கிராமத்துப் பெண்ணைக் கவர்ந்த காக்கி சட்டை போட்ட மச்சான்.
    கவிதை வரிகள் அருமை.

    ReplyDelete
  16. அட! அட! மிக மிக ரசித்தேன் ஒவ்வொரு வரியையும். கிராமத்துப் பெண்ணின் காதல் எவ்வளவு அழகாய்ச் சொல்லிவிட்டீர்கள்! பிரமாதம் சசிகலா!

    ReplyDelete
  17. செங்கல்லு, கருங்கல்லு, பனங்கள்ளு - எம் புருஷன் போனானாம் திண்டுக்கல்லு..

    பாட்டி சொன்னா சரியாத்தான் இருக்கும் ;-)

    ReplyDelete
  18. கவிதை கலக்கல் அக்கா..

    ReplyDelete
  19. கண்ணுபடபோகுமுன்னு
    காவ காக்கும் என் இமையும்.

    ரொம்ப பாசமோ
    மிக அருமை சசிகலா
    கிராமிய வாசம் நல்லா வீசுது

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  20. கிராமிய மணம் வீசுது கவிதையிலே......

    படித்து ரசித்தேன்....

    ReplyDelete
  21. சசிகலா: இந்த இரண்டு கல்லும் இல்லாவிட்டாலும்..உங்களுகு பிரச்னை இல்லை என்று நினைக்கிறேன்--இருக்கவே இருக்கு மாமன் பல்லு!
    தமிழ்மணம் வோட்டு +1
    _________
    அம்மிக்கல்லு ஆட்டுக்கல்லு
    அழகா இருக்கும் மாம பல்லு

    ReplyDelete
  22. மாமனை ரசித்துக் காதலிக்கும் விதமும்
    காவல் காக்கும் மனசும் அழகு.

    ReplyDelete
  23. கல்லும் பல்லும் உரசாமல் பார்த்துக்கொள்ளுங்கள்..!

    ReplyDelete
  24. வணக்கம்
    இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரிhttp://blogintamil.blogspot.com/2014/02/thalir-suresh-day-4-part2.html?showComment=1391731226087#c3254533073173604043

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete

  25. //அம்மிக்கல்லு ஆட்டுக்கல்லு
    அழகா இருக்கும் மாம பல்லு///

    சிரித்து கொண்டே வாசித்தேன் ... அழகான வர்ணனை ...!!!

    வலைச்சரம் வாயிலாக கவிகளை வாசிக்க வந்தேன் ...!!!

    தொடர வாழ்த்துக்கள் ...!!!

    ReplyDelete