Sunday 10 November 2013

யாரு கண்ணு பட்டதடி !


கண்ணாமூச்சி ஆட்டமாட
கணக்குக்கு யாருமில்ல..

கால் கடுக்க காத்திருந்தேன்
காத்துங்கூட துணைக்கு வரல.

ஆட்டமெல்லாம் மறந்துடிச்சோ ?
ஆடுகளம் எங்கே தேட..

கல்லும் மண்ணும் கதை சொல்ல
கேட்ட பொழுதுகள் கனவா சொல்லு ?

திண்ணைச்சுவரும் திரும்பிபார்க்க
விம்மித்துடிப்பதை கேட்டதுண்டோ ?

அன்னம் சிந்திய வாசல் படியும்
அழகாய் சுவைத்த கூட்டாஞ்சோறும்

யாரு கண்ணு பட்டதடி
கனவாய் எல்லாம் போனதடி

ஆத்தா நீயும் போனபின்னே
எல்லாம் கூட வந்துட்டுதோ ?

அப்பா வைச்ச தென்னம்பிள்ள
அதுவும் இங்க காணவில்ல.

தப்பா எல்லாம் நடக்குதிங்கே
தட்டிக்கேட்க யாருமில்ல.

தாத்தா இருந்த வரையினிலே -அவர்
தடிக்கு பயந்து நீதி நேர்மை 
தழைச்சதிங்கே..

ஒருவர் பின்னால் ஒருவர்
போனதுபோல்...
நேர்மையும் அவர்களை
தேடிப்போனதுவோ..?

59 comments:

  1. ம்ம்ம்ம் எல்லாமே நாமளே தான் தொலைச்சுட்டு நிக்குறோம்... அடுத்து என்ன சொல்றதுன்னு தெரியல

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் தோழி யார் தான் என்ன சொல்ல முடியும். வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

      Delete
  2. ஒருவர் பின்னால் ஒருவர் போனதுபோல்... நேர்மையும் அவர்களைத் தேடி போனதுவோ... அருமையான வரிகள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

      Delete
  3. எல்லோரும் "ஆரம்பம்" படம் பார்க்க போயிருப்பங்களோ? ;-)

    ReplyDelete
  4. இழந்ததையெல்லாம் நினைவுறுத்திப்போகும்
    ஆழமான கருத்துடன் கூடிய
    அற்புதக் கவிதை
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நினைவு மட்டும் மீதமாக இருக்கிறது ஐயா.

      Delete
  5. ''..நேர்மையும் அவர்களை

    தேடிப்போனதுவோ..?..''
    தாக்கத்தாலொரு ஆக்கம்
    ஏக்கம் மாறாத வீக்கம்.
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

      Delete
  6. வணக்கம்
    பழைய நினைவுகளை சுமந்த கவிதை அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

      Delete
  7. காலம் செய்த கோலம் இதுவே .மனம்
    கனத்து நிற்கின்றோம் பழமையை என்றுமே நேசிக்கும்
    மாறாத மனத்துடனே .

    ReplyDelete
    Replies
    1. உணர்வில் ஒத்துப்போகிறோம். வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

      Delete
  8. ஓரள்வுக்கு நீங்க சொன்ன வந்தது உண்மைதான். அந்த தலைமுறையோடு எல்லாமே போயிருச்சி.....அருமையான வரிகள்...

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

      Delete
  9. அருமையான வரிகள்... இன்னம் கொஞ்சம் நீட்டித்திருக்கலாமோ என்பது போல் எண்ண வைத்தது

    ReplyDelete
    Replies
    1. ஏக்கத்தின் வரிகள் நீண்டு கொண்டு தான் போகும் ...வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

      Delete
  10. ஒருவர் பின்னால் ஒருவர்
    போனதுபோல்...
    நேர்மையும் அவர்களை
    தேடிப்போனதுவோ..?//

    இன்று கிராமங்கள்கூட இப்படி ஆகிவிட்டன மகளே! உண்மையை
    உரைத்தாய்!

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க ஐயா கிராமங்களும் மாறிவிட்டன.

      Delete
  11. tamilmanam +5.
    நானும் கவிதை எழுதலாம் என்று இருக்கிறேன்............!

    ReplyDelete
    Replies
    1. எழுதுங்க எழுதுங்க..வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

      Delete
  12. Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

      Delete
  13. ஏக்கம் நிறைந்த கவிதை..உண்மைதான்! அருமையான கவிதை சசிகலா!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

      Delete
  14. ஏக்கப் பெருமூச்சு விடுவதைத் தவிர
    வேறொன்றும் செய்ய முடியவில்லை.

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க சரியாக சொன்னீங்க. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

      Delete
  15. இழந்தவை யாவும் ஏங்கத்தான் வைக்கின்றன.

    அழகான கவிதை. அசத்தலான வரிகள்.

    பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க ஐயா.

      Delete
  16. கடைசிவரிகள் கலக்கல்! அருமையான படைப்பு! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

      Delete
  17. தப்பா எல்லாம் நடக்குதிங்கே
    தட்டிக்கேட்க யாருமில்ல.

    தடி எடுத்தவன் தண்டல்காரனாகிட்டான் இப்போ..!

    ReplyDelete
    Replies
    1. மிகச்சரியாக சொன்னீர்கள். வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

      Delete
  18. எத்தனையோ உள்ளங்களின் ஏக்கங்களை அழகாக வடித்திருக்கிறீர்கள்.அருமை சசிகலா.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க அம்மா.

      Delete
  19. 'யாரு கண்ணு பட்டதடி
    கனவாய் எல்லாம் போனதடி'
    அந்தநாட்கள் மீண்டுவருமா? நினைவில் மகிழ்ந்திருப்போம்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க நினைவில் வாழும் நாட்கள். வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

      Delete
  20. இன்றைய அவலம் !அருமை சகோ!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

      Delete
  21. நிதர்சனத்தை நிழற்படமாய்ப் போனவற்றை
    நினைவில் கொண்டுவந்த
    அழகிய கற்பனையும் கவிவரிகளும்!

    வாழ்த்துக்கள் தோழி!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க தோழி.

      Delete
  22. அன்பு சகோதரிக்கு வணக்கம்..
    ஏக்கங்கள் நிறைந்த கவிதை. இன்றைய அவசர உலகில் எல்லாமே மாறி போய் விட்டது. கவிதை நன்று. தொடர வாழ்த்துக்கள் பகிர்வுக்கு நன்றீங்க சகோதரி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க சகோ.

      Delete
  23. Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

      Delete
  24. சுடும் எதார்த்தம்!
    “அன்னம் சிந்திய வாசல் படியும்
    அழகாய் சுவைத்த கூட்டாஞ்சோறும்”
    அருமையான வரிகள். ஒருத்தனையே கட்டிக்க நினைத்து, ஆளுக்கொரு திசையாய்ப் பிரிந்து போன கிராமத்துத் தோழிகள் கதையை வைரமுத்து சொன்னது நினைவுக்கு வருகிறது.
    இதற்குள் - “கேட்ட பொழுதுகள்“ போலும் இலக்கணச் சுத்தமான சிற்கில சொற்களையும் வழக்குக்குள் கொண்டுவரலாம்ல? பாராட்டுகள் தங்கையே!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்துப்படியே எழுத முயற்சிக்கிறேன் அண்ணா. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க அண்ணா.

      Delete
  25. எதார்த்தமான கவிதை.
    அருமை அக்கா.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க சகோ.

      Delete
  26. கருத்துள்ள வரிகள்... வாழ்த்துக்கள் சகோதரி...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க சகோ.

      Delete
  27. அழகான ஆழமான முடிவு!
    வாழ்த்துக்கள் சசிகலா.

    ReplyDelete
  28. நெஞ்சினிக்க நினைவலையை மீட்டியது நிறைவாய் இருக்கிறது.
    ஏக்கமும் இருக்கத்தான் செய்கிறது.
    பகிர்வுக்கு நன்றி வாழ்த்துக்கள்...!

    ReplyDelete
  29. ஆதங்கங்களை வெளிப்படுத்திய அருமையான கவிதை! தொடருங்கள்! பகிர்விற்கு நன்றி!

    ReplyDelete
  30. அருமை....

    தொடரட்டும் கவிதை மழை....

    ReplyDelete