Saturday 30 November 2013

நன்மையும் தீமையும் !


தேடுவதுதென்னவோ அன்பைத்தான்
மனம் நாடுவதென்னவோ நட்பைத்தான்
தேன் கூட்டைக் காத்திடும் குளவியும்
மனிதனுக்குத் தேளாய் தெரியும்.

மாணிக்கத்தை காத்து நிற்கும்
பாம்பும் விஷமாய் மட்டுமே 
விறகென நினைக்கும் மரக்கிளையும்
வலி கொடுக்கும் முள்ளாய்

தாகம் தீர்க்கும் நீரும்
தம்மை அழிக்கும் அலையாய்
மோகனமாய் தீண்டும் தென்றலும் 
மோதியழிக்கும் புயலாய்

காத்து நிற்கும் வான்கொடையும்
கருகியழிக்கும் இடியாய் மின்னலாய்
இயற்கையின் படைப்பில் இரண்டுமிருக்கும்
இதில் நன்மையெது தீமையெது  ?

29 comments:

  1. ஆழமான சிந்தனையுடன் கூடிய அற்புதப் பதிவு\
    குறிப்பாக இறுதி வரிகள்
    பகிர்வுக்கும் தொடரவும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. மிகவும் அருமை...

    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. வணக்கம்

    மனதை நெருடிய கவிதை அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. //இயற்கையின் படைப்பில் இரண்டுமிருக்கும்//

    அழகான அற்புதமான ஆக்கம். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  5. அற்புதமான கவிதை...
    வாழ்த்துக்கள் அக்கா...

    ReplyDelete
  6. கவிதை அருமை வாழ்த்துக்கள் குலவி அல்ல குளவி

    ReplyDelete
  7. நன்மை-தீமை இரண்டும் கலந்தது இயற்கை! அதில் நல்லதை நாடி எடுப்பது நம் வேட்கை! அருமையான கவிதை! நன்றி!

    ReplyDelete
  8. நன்மையும் ,தீமையும் நாம் பகுத்துக்கொள்வதுதான்/த.ம 4

    ReplyDelete
  9. தேன் கூட்டைக் காத்திடும் குளவியும்
    மனிதனுக்குத் தேளாய் தெரியும்.

    தொல்லை கொடுக்காதவரை
    பிரச்சினை தராது இயற்கை ...!

    ReplyDelete
  10. Eniya vaalththu.
    Vetha.Elangathilakam.

    ReplyDelete
  11. சகோதரிக்கு வணக்கம்
    அழகான சிந்தனை சகோதரி. பலநேரம் இயற்கையின் மீதான கேள்விக்கணைகள் வந்து போவதுண்டு. வாழ்க்கையில் இருமைகள் என்று சொல்லக்கூடிய பிறப்பு-இறப்பு. மேடு-பள்ளம், இன்பம்-துன்பம் என அனைத்தையும் இறைவன் அப்படித் தான் படைத்துள்ளான். அவற்றில் இரண்டையும் கடந்து செல்லும் தைரியத்தையும், எதையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தையும் நாம் வளர்த்து கடைபிடிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். பகிர்வுக்கு நன்றி..

    ReplyDelete
  12. இயற்கைக்கு எந்தத் தொந்தரவும் இல்லாதவரை பிரச்சனை இல்லை. மனிதர்களாகிய நாம் தான் தொல்லை கொடுத்து இன்னல் படுகிறோம்... த.ம.5

    ReplyDelete
  13. இன்பமும் சமயத்தில் துன்பம் போலவும்
    துன்பமும் சில நேரங்களில் இன்பம் போலவும்
    இருக்கும் வாழ்க்கைத் தத்துவம் விளக்கிய
    கவிதை நன்று.

    ReplyDelete
  14. அருமை உங்கள் சிந்தனை!

    இந்த இயற்கையிடமிருந்துதான் மனிதனும்
    நட்பாயும் பகையாயும் இருக்கக் கற்றிருக்கின்றான்.

    தத்துவமான கவிவரிகள்! வாழ்த்துக்கள் தோழி!

    ReplyDelete
  15. பிரமாதம்..மிக அருமையான சிந்தனை சசிகலா! :)
    த.ம.8

    ReplyDelete
  16. நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் இருப்பதைப் போல, இறைவன் படைப்பில் ஒவ்வொன்றிற்கும் நன்மை தீமை என்று இரண்டு அம்சங்கள் இருப்பதை அழகாகச் சொன்னீர்கள்.



    ReplyDelete
  17. நன்மையும் தீமையும் அதன் பயன்பாட்டில்! அழகாய்ச் சொன்னீர்கள். பாராட்டுகள் சசி.
    (குளவி- திருத்தவேண்டுகிறேன்)

    ReplyDelete
  18. இனிய வணக்கம் தங்கை சசி.
    இரண்டும் கலந்ததே வாழ்க்கை என்ற
    அற்புதப்பொருள் உரைக்கும் இயற்கை.
    கவிவரிகள் மிகவும் அழகாக அமைந்திருக்கின்றன.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  19. இரண்டும் சேர்ந்ததுதான் வாழ்க்கை!

    ReplyDelete
  20. எல்லாவற்றிலும் நன்மையையும் உண்டு தீமையும் உண்டு / கவிதை சிறப்பு

    ReplyDelete
  21. எதிர் எதிர் துருவங்களிடையே ஈர்ப்பு போல எல்லாமே இரண்டுதான்.
    நெட்டை-குட்டை, குண்டு-ஒல்லி, சப்பை-தொப்பை என எல்லாமே... நன்மையும் தீமையும் அதனதன் விளைவில்... அடேயப்பா...
    “இயற்கையின் படைப்பில் இரண்டுமிருக்கும்
    இதில் நன்மையெது தீமையெது? -கண்ணதாசன் ரேஞ்சுக்கு வருது கவிதை! அண்ணனின் அன்பான வாழ்த்துகள் பா. கவிதைத் தொகுப்பு எப்போ?

    ReplyDelete
    Replies
    1. அண்ணா தங்கள் ஆசியுடன் விரைவில் பதிவாகும் என நம்புகிறேன். நன்றிங்க அண்ணா.

      Delete
  22. மனிதர்களின் இரண்டு முகம் போல இயற்கைக்கும் இரண்டு முகங்கள் இருக்கின்றன! அதைக்கவிதையாய் அழகுற வடித்த விதம் அருமை!

    ReplyDelete
  23. அழகிய நடை.நன்மையும் தீமையும் அவரவர் மனதைப் பொருத்தது.வாழ்த்துக்கள் தோழி.

    ReplyDelete
  24. என்ன சகோதரி .ஆளையே காணோமே!
    நலமா?
    நலமறிய ஆவல்.
    இறையாசி நிறையட்டும்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  25. அன்புள்ள சகோதரிக்கு! இப்போது வலைப்பக்கம் உங்கள் கவிதைகள் வருவதில்லையே? என்ன ஆயிற்று? மீண்டும் வருக!

    ReplyDelete
  26. இணைய உறவுகள் அனைவருக்கும் வணக்கம். அனைவரின் நலன் அறிய ஆவல். எனக்கு கணினி இயங்காத காரணத்தால் இணையம் வர இயலவில்லை. சரியானதும் வருகிறேன். அன்புடன் விசாரித்த சகோதர சகோதரிகளுக்கு எனது அன்பையும் மனமாா்ந்த நன்றியையும் தொிவித்துக்கொள்கிறேன். விரைவில் சந்திப்போம்.

    ReplyDelete