Wednesday 6 November 2013

திண்ணைப்பேச்சு !-6


கூடி நிக்கும் கூட்டமும் தான்
குறை குறையா சொல்லிடுதே..

 ஆத்தங்கரை குளத்தங்கரை
எங்கும் இதே பேச்சே...

என்னடி புள்ள வளத்த
தலை ஒரு பக்கமும்
காலொரு தினுசாவும்.

மூக்குக்கு மேல கோபமிருக்கும்
முந்தானையால் பிள்ளைக்கு
முகந்தொடைக்கவும் நேரமிருக்காது.

அந்தக் கால வழக்கத்தை
அரை நொடியில் மறந்து விட்டு

அதுவா வளரும் பிள்ளையென
அம்மிக்கல்லா இருந்துவிட்டா
அடுக்கடுக்கா வந்து சேரும் வசவுகள்.

பெற்றவரை பெரியவரை
அனுசரித்து போக தெரிஞ்சா
இந்த குறை இப்ப ஏன்டி

பிள்ள பெத்த நாளிலிருந்து
தினம் தினம் அதிகாலை
நல்லெண்ணெய் தேய்ச்சி
கை காலை பிடிச்சி விட்டு
வெந்நீரில் குளிக்க வச்சி.

சூரிய வெளிச்சத்தில் 
காட்டி நின்னு..
பானை செய்யும் பக்குவமா.

கை தலை காலுன்னு பிடிச்சிவிட
சிற்பி செய்த சிலையாட்டம்
சிரிச்சி வளரும் பிள்ளையுந்தான்

மாமியார் பேச்சை கேட்டுக்க
மனம் நோகாம நடந்துக்க.


28 comments:

  1. // சிற்பி செய்த சிலையாட்டம்
    சிரிச்சி வளரும் பிள்ளையுந்தான் //

    வாவ் , மிக மிக அருமை தோழி !

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி தோழி.

      Delete

  2. கடந்த சில நாட்களாக உங்களின் திண்ணை பேச்சு இல்லாமல் எங்கள் தூக்கம் போச்சுங்க மீண்டும் பேச்சை ஆரம்பிததற்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. கிண்டல் தானா.. திண்ணையில் பேசினவங்களுத்தான் கோபம் வரும் எனக்கு வராது.

      Delete
  3. Very good advice to take care of children. Your growth is really astonishing :-)

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சிங்க. நன்றியும்.

      Delete
  4. பாட்டு பாடிக்கொண்டே என் பையனுக்கு நான் செய்த மசாஜ் நினைவுக்கு வருகிறது..அம்மா பிள்ளைக்கான பிணைப்பை அதிகரிக்கும்..அருமையான பதிவு! நன்றி சசிகலா!

    ReplyDelete
    Replies
    1. சமீப பயணத்தில் ஒரு குழந்தையை பார்த்தேன் தோழி. தலை நீண்டு கால் ஒரு மாதிரி இப்படியாக உடனே எனக்கு என் மாமியார் என் குழந்தைகளுக்கு செய்தவைகள் நினைவு வந்தது. வயதானவர்கள் குழந்தைகளுக்கு எவ்வளவு முக்கியம் அதனால் இந்த பகிர்வு.

      Delete
  5. //கை தலை காலுன்னு பிடிச்சிவிட
    சிற்பி செய்த சிலையாட்டம்
    சிரிச்சி வளரும் பிள்ளையுந்தான்//

    ஆஹா, அருமை,. அருமை. பாராட்டுக்கள், வாழ்த்துகள், பகிர்வுக்கு நன்றிகள்.

    படத்தேர்வும் மிக அருமை,

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சிங்க ஐயா. நன்றியும்.

      Delete
  6. எளிமையான வரிகளுக்குள் அர்த்தமுள்ள வாழ்க்கை ரகசியம்.

    ReplyDelete
    Replies
    1. எளிமையான செயல்களைத்தான் இன்றைய தலைமுறை செய்வதில்லை.

      Delete
  7. ''..பெற்றவரை பெரியவரை

    அனுசரித்து போக தெரிஞ்சா

    இந்த குறை இப்ப ஏன்டி...''
    romba bushyjo!....Nalama?.....
    Eniya vaalththu...
    Vetha.Elangathilakam.

    ReplyDelete
    Replies
    1. பிஸி எல்லாம் இல்லை தோழி தீபாவளிக்கு ஊருக்கு சென்று வந்தேன் அதனால் வலைப்பக்கம் வர தாமதம்.
      நலமே தோழி தங்கள் நலனை அறிய ஆவல்.

      Delete
  8. பிள்ளைவளர்ப்பு பாடம் அருமை! பாராட்டுக்கள்!

    ReplyDelete
    Replies
    1. பாடம் இல்லைங்க அனுபவத்தை சொன்னேன் அவ்வளவே.

      Delete
  9. பச்சைமண்ணை குழவியாக
    உருவாக்கும் குயவனாக அன்னை ...!

    ReplyDelete
    Replies
    1. மிகச்சரியாக சொன்னீர்கள்.

      Delete
  10. வணக்கம்
    பிள்ளை வளர்ப்பு பற்றிய பதிவு அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  11. நல்ல பதிவு.. ரசித்தேன்.

    ReplyDelete
  12. குழந்தைக்கு எண்ணைய் தேய்ப்பதையே மறந்துவிட்ட தலைமுறை இதைப் படிக்க வேண்டும். பழனி.சோ.முத்துமாணிக்கம்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க அண்ணா.

      Delete
  13. அன்பு சகோதரிக்கு,
    வணக்கம். இன்றைய தலைமுறைக்கு அவசியமான பதிவு சகோதரி. வார்த்தைகள் அனைத்தும் ஜொலிக்கின்றன. மறையும் பழக்கத்தை அழகான கவியால் தந்து அசத்தியிருக்கிறீர்கள் சகோதரி. உண்மையில் உங்கள் சிந்தனை பயனுள்ளது. பகிர்வுக்கு நன்றிகள்..

    ReplyDelete
  14. அ அது ஆரம்பம் அன்பணிந்தே வாழும்.
    ஆ வது ஆசையோ ஆணவமோ இல்லை
    இ யது இன்பமும் இன்னலும் இணைந்தே
    ஈ யில் வாழ்வது ஈகையும் ஈரமும் சரியே
    உ வில் உண்மையும் உறவும் குடியமர
    ஊ வாய் ஊனும் ஊக்கமும் பாடிநிற்க
    எ யாய் எண்ணும் எழுத்தும் கண்ணாக
    ஏ யது ஏக்கமும் ஏற்றமும் நினைக்க
    ஐ யில் ஐக்கியமும் ஐயமும் படர்ந்தே
    ஒ ஒவ்வொரு வாழ்விலும் ஒற்றுமை பாட
    ஓ ஓயாது ஓடியோடி நிம்மதியதை தேட
    ஔ வின் வாழ்வதின் துணை தமிழாக
    ஃ தே என்று நினைவுகளும் கனவுகளும்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன்.நன்றிங்க.

      Delete