ஆரோக்கியம் சமையலில் மட்டுமல்ல
ஆடையிலும் இல்லாமலே போனது
பேறு காலத்தின் போது
பிறந்த குழந்தைக்கும்
பின்னர்
கோடித் துணிக்கும் மட்டுமே
தேடப் படுகிறது நூற் துணிகள் .....!
கூட்டுப் புழுவாய்
வாழ்வைத் தொடங்கி
கொஞ்சம் கொஞ்சமாய்
நூலாய் விரிந்து
அது நெசவாளரின் வாழ்வாய் மாறி ...
கஞ்சியில் நீராட்டி
தெருவில் பாகிட்டு
தட்டி சிக்கெடுத்து ..
பாகில் கோர்க்கின்ற அழகைக் காணோமடி
கால்கள் நடன மாட
தறி நாடாவோடு கைகள் பேச
ஆடவர் பெண்டிர் இணைந்துழைத்து
அழகாய் உருபெறும்
வண்ண ஆடை அழகை
பட்டாம் பூச்சி வேடம் பூண்டு
பறந்து திரியும் மானிடர் கூட்டம்
அறியார் இந்த வேதனையை
அவர் கணக்கில் இதுவெல்லாம்
நாகரீக மாற்றம் மட்டும் தானே
கரித்துடைக்கப் போகின்ற துணியின்
கடைசி வாழ்வு போல்
இவர் வாழ்வும் கரியாகிப் போதல் முறையோ ..?
காந்தியின் கனவும்
பொய்யாய் போனதடி
திரும்பி பார்க்க வேண்டும் .
பார்ப்பீர்களா....?

