Tuesday, 6 December 2011

அறியாமை

வெள்ளத்தில் அடித்து ...
சென்ற வீடுகள் ...
மரக்கிளைல் அமர்ந்து கொண்டு ...
கப்பல் விட காகிதம் ..
இல்லையென அழும் குழந்தைகள்  .
சசிகலா

ஏங்கிய நாட்கள்

சினிமா காட்சிகளில் ..
பார்க்கவும் ...
பாடல்களில்  ரசிக்கவும்
மட்டுமே இனிதாய் ....இருந்த காதல் .

நமக்கும் இந்த அனுபவம் ...
வருமோ என்று ஏங்கிய
 நாட்கள்  எத்தனை எத்தனை ....
இனிக்கத்தான் செய்கிறது ...
அந்த நாட்கள் மட்டுமே .
சசிகலா

உன் பார்வை தீயில்

நான் மவுனமாய் ....
இருப்பதாய் கோப்படுகிறாய்...
உன் பார்வை தீயில் ...
பற்றி எரிந்து கொண்டிருக்கும் ....
வார்த்தைகளுக்குத்தான் ..
மவுன அஞ்சலி செலுத்துகிறேன் ..
என்பதை எப்போது ....
உணரப்போகிறாய் .

சாயலை

தெருவில் விளையாடும் ...
மழலை கூடத்தில் எல்லாம் ..
தவறாமல் தேடிப்பார்க்கிறேன் ..
என் சிநேகிதிஇன் சாயலை .
சசிகலா

Monday, 5 December 2011

பார்வைக்கு அர்த்தம்

உனக்கு புரையேறும் போதெல்லாம் ...
யாரோ நினைகிறார்கள் ...
என்று சொல்லாமல் ...
எனை முறைக்கும் ...
உன் பார்வைக்கு அர்த்தம் ...
புரிகிறது  எனக்கு .
சசிகலா

நடுவராக நீ

என்னுள் ஒரு பட்டிமன்றமே ...
நடந்து கொண்டிருகிறது ...
உன்னோடு அதிக நேரம் ..
இருப்பது நானா ...
என் நினைவுகளா என்று .

 சசிகலா

கண்ணாடி

நீ எனக்காய் ..
காத்திருபதாய் சொல்லியும் ..
எனக்கு விடை கொடுக்க மறுக்கிறது..
என் வீட்டு கண்ணாடி .
சசிகலா