நிலவதனை பார்த்திருந்தே நில்யென்றே சொல்லிவர
களவதனை கற்றநிலா நில்லாமல் போகவரWednesday, 2 April 2014
நிலா வரும் நேரத்தில்...
நிழலுனக்கு ஏன்எதற்கு நீதிருடி தானெக்கு
Friday, 28 March 2014
மானும் மயிலும் !
கொத்தோட பூ பறிச்சி
கொண்டையில தான் சொருகி..
கொல்லப்புறம் போயிருந்தேன்
கொடுக்காபுளி பறிக்க...
பின்னாடி நிழல்வரவே
முன்னோடிப்போக துணிந்தேன்
என்னாடி கண்ணேயென
சொல்லாடி வந்தவனால்..
எங்கோடிப்போச்சுதடி
என் கோபம்...
தள்ளாடி நிக்குதடி காலும்.
அறுத்துப் போட்ட
கோழியாட்டம்..
அல்லாடுறேன் நானே...
அவனோ தப்புத்தாளம்
போட்டுக்கிட்டு..
துள்ளி ஓடுறான் மானா..
தொரத்தி வந்த
புள்ளி மானை
தொலைதூரம்
காணலையே...?
தொக்கி நிக்கும்
என் உசிரும்
பிழைச்சிடுமா ?
தோணலையே ?Monday, 24 March 2014
வனப்புமிகு வடசேரி (தொடர் பதிவு)
வணக்கம் உறவுகளே அனைவரும் நலம் தானே ? தொலைதூர பயணித்தின் நடுவே கடிதப்போக்குவரத்தாக ஆகிவிட்டதா ? தென்றலின் வருகையும். என்ன செய்ய ? சரி விடுங்க. இனி அடிக்கடி தொடர்பில் இருக்க முயற்சிக்கிறேன். இப்போது திடீரென அனைவரையும் இங்கழைத்து நலம் விசாரிக்கும் ஆவல் வந்தது. ஆனால் சும்மா யாரும் அழைச்சா வருவாங்களா ? ஆதலால் ஒரு தொடர்பதிவு. யாரும் திட்டாம... தேடிவந்து அடிக்காம சமத்தா எழுதுவிங்களாம் சரியா ? பொதுவா எல்லோரும் பிறந்த ஊர் பற்றி தான் பெருமையா பேசுவாங்க.. நாம் புகுந்த வீட்டு (ஊர்) பெருமையை பேசுவோம் வாங்க...
காடுகர தோப்பெங்கும் கானக்குயில் பாட்டுசத்தம்
இனி என்ன நான் அழைக்கும் அன்பு நெஞ்சங்கள்.
ரஞ்சனி நாராயணன்
கோமதி அரசு
தி.தமிழ் இளங்கோ
ஆதி வெங்கட்
ராஜி
குடந்தையூர் சரவணன்
என்ன ஆண் பதிவர்கள் பெயரும் இருக்கே என்று கேட்பது தெரிகிறது. ஏன் அவர்களும் முதன் முதலாக பெண் பார்க்கப் போன அனுபவத்தை எழுதலாமே. இவளின் அன்பு வேண்டுகோளை ஏற்று பதிவிடும் ஒவ்வொருவரும் குறைந்தது நால்வரை அழைக்க வேண்டும்.
Wednesday, 19 March 2014
வரமா ? சாபமா ?
கால நேரம் கரைந்திடுதே
கவலை நாளும் பெருகிடுதே.கடமையே என்றும் கண்ணாக-மனக்
காயமே அவருக்கு வரவாக.
கனவாய்ப் போனது இன்பமே
காட்சியாய் என்றும் வறுமையே.
உறிஞ்சும் உழைப்பை கருதிடுவீர்
உண்மையாய் ஊதியம் தந்திடுவீர்.மனிதம் இருப்பின் நோக்கிடுவீர்
மனித நேயத்துடன் காத்திடுவீர்.
எளியோர் செய்த பாவமா
ஏழ்மை என்பது சாபமா ?Wednesday, 12 March 2014
காதலின் லாவகம் !
தண்ணி குடம் பக்கமிருக்கு..
சாடமாட பேச்சு வேணும்
சங்கதிக்கு தூதும் வேணும்.
அன்ப மட்டும் வச்சிக்கிட்டு
அண்ணார்ந்து பார்த்து லாபமில்ல.
பேச்சு வழக்கு : தொலவிருக்கு-தொலைவில்
Monday, 10 February 2014
காவியம் நீ...!
கண்கள் கண்டெடுத்த
காவியம் நீ...
கடிதம் ஒன்றை
எழுதிடத்தான்...
எழுதிடத்தான்...
எத்தனை எத்தனை
வார்த்தைகளை புரட்டியபடி..
என்னென்று அழைத்திட
அன்பே...
அது தான் நிறைய இருக்கிறதே.
அது தான் நிறைய இருக்கிறதே.
ஆருயிரே...
அது தான் உனக்காக
என் உயிர் இருக்கிறதே.
என் உயிர் இருக்கிறதே.
அத்தானே..
யாரேனும் என்ன
நீயே சிரித்திடுவாய்..
என்னென்று எழுதிட
எல்லாமுமே நீயானபிறகு..
எல்லாமுமே நீயானபிறகு..
உனை காணும் போதில்
விழிகள் பேசிடும்
வார்த்தைகளை விடவா
இந்த விரல்கள் பேசிவிடப்போகிறது.என்ன இப்ப இப்படி ஒரு கவிதையென கேட்பது கேட்கிறது. முகநூலில் கவிதை சங்கமம் என்ற குழுமத்திற்காக எழுதியது.
Wednesday, 5 February 2014
Subscribe to:
Posts (Atom)









