Sunday 5 October 2014

முத்துக்கள் மூன்று !

மாய மகிமையோ மாதேவன் மைந்தனோ
நேயக் கரம்நீட்டி நீயணைப்பாய் - தூமணியே
காயப் பெருந்துயர் கானலாய் போகிட
தூய கணபதியே காப்பு.

 தேனே கரும்பே தெவிட்டாத கற்கண்டே
ஊனே உருகுதடி உன்னெழிலாள் -சிட்டாய்
பறக்குதடி உள்ளம் கவிதொடுக்க மொட்டாய்
துறக்குமடி பூவும் களித்து.


உன்னை நினைத்தே துடிக்கும் இதயத்தால்
தன்னை மறந்ததே மாயமோ ?- என்றென்றும்
என்னில் இருக்க நலமும் செழிக்குமே
அன்னையே நீயே துணை.

10 comments:

  1. வெண்பாக்கள் சிறப்பு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. வணக்கம்

    கவிதையின் வரிகள் சிறப்பு பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. முத்துகள் தித்திக்கும் என்பதை உங்கள் கவிதையின் மூலம் அறிந்து கொண்டேன்.. பாராட்டுக்கள்

    ReplyDelete
  5. தன்னை மறந்ததே மாயமோ...? அட...!

    ReplyDelete
  6. பாராட்டுக்கள்

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள்... அருமை...

    ReplyDelete
  8. அருமை வாழ்த்துகள்

    ReplyDelete