Friday 14 September 2012

தேன் அருந்தா வண்டினமாய் !



அகமுக மகிழ
நகமது நாட்டியமாட
சுகமா என்றாயோ நீயும்
சுற்றமும் மறந்தே போனதே !

பல்லவியும் மறந்தே போக
அந்தரத்தில் கால்கள் நிற்க
சந்ததிகள் சற்றே பிறழ
சந்நிதியாய் நெஞ்சமாக !

மலர் உரசலில் எல்லாம்
மன்மத பானம் வீச
தேன் அருந்தா வண்டினமாய்
மனம் தேம்பியழ நின்றேனடா !

தேவகானம் இனிக்கவில்லை
தேனிசை பாட குயிலுமில்லை
ராகமெலாம் ரகசியம் தேடி
உன்னிடத்தில் சங்கமம் ஆனதடா !

48 comments:

  1. ஆனந்த கீதம
    அன்பிக்கு கிடைக்கவில்லையா?
    துன்பம் துரதுகிறதா?
    தூக்கம் கேடுக்கிறதா?
    சீக்கிரம் சரியாகிவிடும்

    ReplyDelete
    Replies
    1. சும்மா எதையாவது கிறுக்கினா இப்படியா ?

      Delete
    2. சும்மா கவிதைக்காக தான்

      Delete
  2. அகம் மகிழ தங்களின் முகமும் மலர
    தங்களை குளிர்விக்க வருவார்....
    வாழ்த்துக்கள் தங்களுக்கு ...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  3. வரிகள் சொல்லிய விதம் அருமை...

    ReplyDelete
  4. சகோதரி தலைப்பை எப்படித் தான் இப்படித் தேர்ந்தெடுகிறீர்களோ...?

    மலர் உரசலில் எல்லாம்
    மன்மத பானம் வீச
    சில சொற்கள் திடீரென மனதில் பளிச்சென்று பதியும். அருமை.
    கவிதைக்கு வரும் முன் உண்மையில் படத்தில் உள்ள அந்த அழகியை சில நேரங்கள் கண் கொட்டாமல் பார்த்து ரசித்தேன். மிகவும் கவர்ந்துவிட்டது.
    என்னுடைய கணிப்புப்படி அவர்கள் மாதிரி தீட்ஷித் போல இருக்கிறார்கள். இல்லை அவரே தானா...?
    என்னடா கவிதையை விட்டு படத்திற்கு தாவிவிட்டேன் என்று நினைக்காதீர்கள்.இரண்டுமே மனதை கவர்கிறது.

    ReplyDelete
    Replies
    1. படம் தேடி எடுத்து போடும் போது கூட சரியா பார்க்கவில்லை இப்படி சொன்ன பிறகே என் வரிகளை பார்க்காமல் படத்தை கவனிப்பதால் கோபம் வரத்தான் செய்கிறது படத்தின் மேலங்க.

      Delete
  5. மூணு டவுட்டு

    நீங்க அவரை டா போட்டு தான் கூப்பிடுவீங்களா?

    படத்தில் இருப்பது மாதுரி தீட்சித்தா ? (எனக்கு பிடிக்கும்)

    உடம்பு முழுக்க சரியாச்சா?

    ReplyDelete
    Replies
    1. ஓரே பதில் தாங்க இப்ப நல்லாயிருப்பதாக உணர்கிறேன்.

      Delete


  6. // மன்மத பானம் வீச...//

    அது என்ன மன்மத பானம் ?
    அது மன்மதனின் பாணம் ? (பாணம் = அம்பு . . பானம் = நமக்கு . வேண்டாம். அது வம்பு)

    இல்லை அது
    பானம் தானோ ?

    " பல்லவி மறந்து போக
    அந்தரத்தில் கால்கள் நிற்க..."

    பானம் தான் போல இருக்கு.
    பார்யாள் பார்க்கலைனா
    நாமும் கொஞ்ச்ம்
    போட்டுப்பார்ப்போம்.

    இல்லை.. பாணம் தான் அப்படின்னா
    இராமானுசர் வருவதற்குள்
    இரேஸ் செஞ்சு சரி யுங்க்ள்.


    சுந்தரத் தமிழிலே
    சூபரான கவிதை இது.
    வந்து இதை வாசிக்க
    வானெல்லாம் பொன்னாகும்

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
    Replies
    1. ஒரு தாள் என் கையில் இருந்தால் நான் கவிதை எழுதுவேன் . அதுவே என் மகனிடம் இருந்தால் காகித கப்பல் விடுவான் இப்படித்தான் ஐயா அவரவர்க்கு எண்ணங்கள் மாறுபடலாம்.

      Delete
  7. தலைப்பு பிடிச்சு இழுத்துச்சு... கவிதை மனசை மயக்கிச்சு... என்னா வரிகள்! சூப்பரு... ஆனா இதெல்லாத்தையும் விட கவிதைக்கு நீங்க வெச்ச படம் மனசை மொத்தமாத் திருடிடிச்சு... ஹி... ஹி...

    ReplyDelete
    Replies
    1. ஆக இன்று தென்றல் வருகை மொத்தமும் அந்த படத்தை பார்க்க மட்டுமா ? சரியா போச்சி.

      Delete
  8. தலைப்பு அழகு
    பாடல் அழகு
    படமும் அழகு

    மொத்தத்தில்
    எல்லாமே அழகோ அழகு! ;)

    பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. ஐயாவின் வருகையும் உற்சாகம் தரும் கருத்துரையும் கண்டு மகிழ்ந்தேன் நன்றி ஐயா.

      Delete
  9. தலைப்பு.... :)

    கவிதை... :)

    பதில்கள் :)

    அனைத்தும் அருமை.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  10. அருமையான எழுத்து நடை வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  11. மலர் உரசலில் எல்லாம்
    மன்மத பானம் வீச
    தேன் அருந்தா வண்டினமாய்
    மனம் தேம்பியழ நின்றேனடா !//

    இதெல்லாம் உங்களுக்கு மட்டும் தான் கைவந்த கலை என்று நினைக்கிறேன் ..
    நல்ல சொல்லாடல் .. ரொம்ப ரசித்தேன் அக்கா.. என் வாழ்துக்க்களும் நன்றிகளும்

    ReplyDelete
    Replies
    1. என் வரிகளை மட்டும் கவனித்த சகோவிற்கு நன்றி பா.

      Delete
  12. அழகிய வரிகள்! ஒன்றை ஒன்று மிஞ்சுகின்றன! சிறப்பான கவிதை!

    இன்று என் தளத்தில்
    பிள்ளையார் திருத்தினார்!
    http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_15.html
    வருஷத்துக்கு ஆறு சிலிண்டர்தான்! மண்ணுமோகன் ஆப்பு!
    http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_5435.html



    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  13. படமும் தங்களது வரிகளும் மனதை கவர்கிறது அக்கா!

    ReplyDelete
  14. நல்ல கவிதை! நானும் இரசித்தேன்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  15. "நகமது நாட்டியமாட " எங்கிருந்து புடிச்சீங்க! நல்ல கற்பனை.

    ReplyDelete
    Replies
    1. எங்க பிடிக்கிறது எல்லாம் இங்க இருப்பது தான்.

      Delete
  16. படமும் அதற்கான விளக்கப் பதிவாக
    அமைந்த ஏக்கப் பதிவும் அருமை
    மனம் கவரும் வரிகள்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. ஐயாவின் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க ஐயா.

      Delete
  17. வணக்கம் சகோதரி...
    இப்படி ஒரு எதிர்மறைத் தலைப்பில்
    அற்புதமாக கவி கொடுத்தமை எண்ணி வியக்கிறேன்...
    வண்டென்றால் தேனுண்ணும்
    தேன் அருந்தா வண்டினம்
    என்பதிலேயே ஆயிரமாயிரம்
    கவிகள் பிறக்கும் சொல்லாடல் தெரிகிறது. ...
    கவி நன்று...

    ReplyDelete
    Replies
    1. அண்ணாவின் வருகை மிகுந்த மகிழ்வளித்தது நன்றி அண்ணா.

      Delete
  18. உங்களின் சொற்கோர்வைகளை எப்போதும் ரசிக்கிறேன் சசி.காதலுக்குள் அடங்கிய ராகம்...இனிமை !

    ReplyDelete
    Replies
    1. சகோவின் வருகை கண்டு மிகவும் மகிழ்ந்தேன் நன்றி சகோ.

      Delete
  19. காதல் ததும்பும் கவிதை சசி.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  20. படமும் கவிதையும் மனதைக் கவர்கின்றது.

    ReplyDelete
  21. சூப்பர் கவிதை அக்கா...................

    ReplyDelete
  22. >>மனம் தேம்பியழ நின்றேனடா !

    உன்னிடத்தில் சங்கமம் ஆனதடா !

    கொஞ்சம் கூட மரியாதை இல்லாத கவிதையா இருக்கே?


    >>பல்லவியும் மறந்தே போக

    அறுவடை நாள் ஹீரோயின் தானே?

    ReplyDelete